LATEST NEWS
1000 பேரா… நாங்க 2000 பேரை இறக்குவோ… லியோ படத்துல வந்த பஞ்சாயத்து வரக்கூடாது.. கங்குவாவில் உஷாரான சூர்யா..!!

முன்னணி நடிகரான சூர்யா சரித்திர கதையை மையமாக வைத்து உருவாகும் கங்குவா படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை சிறுத்தை சிவா இயக்குகிறார். இதுவரை இப்படி ஒரு படத்தில் சூர்யா நடித்தது இல்லை என்று தான் சொல்ல வேண்டும். இந்த படத்தில் சூர்யா இரட்டை வேடங்களில் நடிக்கிறார்.
மேலும் பாலிவுட் நடிகையான திஷா பதானி கதாநாயகியாக நடிக்கிறார். பாபி தியோல், யோகி பாபு, கோவை சரளா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் இந்த படத்தில் நடிக்கின்றனர். தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் என பல மொழிகளில் உருவாகும் கங்குவா படத்தை பொங்கலுக்கு வெளியிட குழு திட்டமிட்டது. ஆனால் சில வேலைகள் முடிவடையாததால் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி போனது.
இந்நிலையில் தளபதி விஜய் நடித்த லியோ படத்தில் 1000 நடன கலைஞர்களை அட வைத்தனர். ஆனால் அவர்களுக்கு சரியாக சம்பளம் போய் சேரவில்லை என பல்வேறு புகார்கள் எழுந்தது. இதே போல கங்குவா படத்திலும் ஒரு அறிமுக பாடலுக்கு பல நூறு நடன கலைஞர்கள் ஆடுவது போல ஒரு காட்சி எடுக்கப்பட்டது.
ஆனால் லியோ படத்தில் நடந்த பிரச்சனை நடந்து விடக்கூடாது என நினைத்த சிவா 100 பேரை மட்டும் ஆட வைத்துள்ளார். பின்னர் கிராபிக்ஸ் மூலம் 2000 பேர் ஆடுவது போல காட்டியிருக்கிறார்களாம். இதன் மூலம் லியோ படத்தில் வந்த பிரச்சனை கங்குவா படத்தில் வராது என்பது தெரிகிறது. இந்த படம் வருகிற ஏப்ரல் மாதம் ரிலீஸ் ஆகும் என ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.