GALLERY
கல்யாணத்துக்கு ரெடியான நடிகை சாய் பல்லவியின் தங்கை.. சிறப்பாக நடந்த நிச்சயதார்த்தம்.. வெளியான கியூட் புகைப்படங்கள் இதோ..!!
முன்னணி கதாநாயகியான சாய் பல்லவி மலையாள சினிமாவில் மலர் டீச்சராக நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்தார். இவர் முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார்.
தற்போது சாய்பல்லவி சிவகார்த்திகேயனின் எஸ் கே 21 படத்தில் நடித்திருக்கிறார்.
மேலும் சாய் பல்லவி மாரி 2, என் ஜி கே, கார்கி ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
நடிகை சாய் பல்லவிக்கு பூஜா கண்ணன் என்ற தங்கை உள்ளார். இவரும் நடிகை ஆவார். பூஜா கண்ணன் சித்திரை செவ்வானம் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
அதன் பிறகு பெரிதாக படங்களில் அவர் கமிட் ஆகவில்லை. ஆனாலும் பூஜா சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருப்பார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பூஜா தனது காதலர் வினீத் என்பவரை அறிமுகப்படுத்தி வைத்தார்.
அவர்கள் சேர்ந்து எடுத்த வீடியோவை பதிவிட்டிருந்தார். அதனை பார்த்த ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
இந்நிலையில் கையில் மருதாணி போட்டு பூஜா தனது அக்கா சாய் பல்லவியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலானது.
அதனை பார்த்த ரசிகர்கள் அக்காவுக்கு திருமணம் ஆகும் முன்னரே தங்கைக்கு திருமணமா என கேள்வி எழுப்பி வந்தனர்.
மறுபுறம் பூஜா கண்ணனுக்கு சர்ப்ரைசாக நிச்சயதார்த்தம் நடந்தது.
இது தொடர்பான ஓரிரு புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலானது. அந்த புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் பூஜா கண்ணனுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.