GALLERY
வில்லன் நடிகர் ஆனந்தராஜின் மகளா இது..? கோலாகலமாக நடந்த திருமணம்.. வைரலாகும் அழகிய திருமண புகைப்படங்கள்.!
தமிழ் சினிமாவில் 90-களில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் ஆனந்தராஜ். இவர் வில்லனாக நடிக்கும் கதாபாத்திரங்கள் நல்ல வரவேற்பை பெற்றது.
இவரது வில்லத்தனம் ரசிகர்களின் மனதை வெகுவாக கவர்ந்தது.
தமிழில் ஒருவர் வாழும் ஆலயம் என்ற திரைப்படத்தின் மூலம் ஆனந்தராஜ் அறிமுகமானார்.
இதனையடுத்து மூவேந்தர், சிம்மராசி, பாட்டாளி, வானத்தைப்போல, கண்ணுபட போகுதய்யா, சூரிய வம்சம், நரசிம்மா, பாட்ஷா உள்ளிட்ட பல்வேறு சூப்பர் ஹிட் படங்களில் ஆனந்தராஜ் நடித்தார்.
இவரது கதாபாத்திரம் மக்களால் அதிக அளவு பேசப்பட்டது.
சுமார் 30 வருடங்களுக்கு மேலாக திரையுலகில் முன்னணி நடிகராக இருப்பவர் ஆனந்தராஜ்.
இவருக்கு ஒரு மகளும், ஒரு மகனும் இருக்கின்றனர்.
இந்நிலையில் ஆனந்தராஜ் மகளுக்கு பிரம்மாண்டமாக திருமணம் நடைபெற்றது.
இதில் நடிகர் சிவகுமார் உள்பட ஏராளமான திரை பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
அது தொடர்பான புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது. அதனை பார்த்த ரசிகர்கள் புதுமண தம்பதியினருக்கு திருமண வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.