GALLERY
அப்பா, அம்மாவின் 50-வது திருமண நாளை கோலாலமாக கொண்டாடிய ஜெயம் ரவி… பலரும் பார்க்காத புகைப்படங்கள் இதோ..!!
முன்னணி நடிகரான ஜெயம் ரவி ஏராளமான வெற்றி படங்களில் நடித்துள்ளார். ஜெயம் ரவி எடிட்டர் மோகன்-வரலட்சுமி தம்பதியின் மகன் ஆவார்.
இந்த தம்பதியின் மூத்த மகனும், ஜெயம் ரவியின் அண்ணனுமான மோகன் ராஜா திறமையான இயக்குனர்களில் ஒருவர் ஆவார்.
இன்றும் தாய் தந்தைக்கு அன்பான மகன்களாக ஜெயம் ரவியும் மோகன் ராஜாவும் உள்ளனர்.
வீட்டில் விசேஷம் என்றால் அனைவரும் ஒன்றாக கூடி விடுகின்றனர்.
எடிட்டர் மோகன் சுமார் 200-க்கும் மேற்பட்ட படங்களுக்கு எடிட்டராக வேலை பார்த்துள்ளார்.
கடந்த 2022-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் எடிட்டர் மோகன்-வரலட்சுமி தம்பதியினர் தங்களது ஐம்பதாவது திருமண நாளை சிறப்பாக கொண்டாடி உள்ளனர்.
அந்த விழாவில் மோகன் ராஜாவும் ஜெயம் ரவியும் தங்களது மனைவி, குழந்தைகளுடன் கலந்து கொண்டனர்.
இதனையடுத்து 50-வது திருமண நாளை முன்னிட்டு மோகன் வரலட்சுமி தம்பதியினர் தங்களது குடும்பத்துடன் திருத்தணி முருகன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்துள்ளனர்.
இது தொடர்பான புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.
அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் என்றும் இது போல அனைவரும் சேர்ந்து வாழ வேண்டும் என வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.