நடிகர் விஜயகுமாரின் பேத்திக்கு கோலாகலமாக நடந்த திருமணம்…. இணையத்தை கலக்கும் லேட்டஸ்ட் போட்டோஸ் இதோ…!! - cinefeeds
Connect with us

GALLERY

நடிகர் விஜயகுமாரின் பேத்திக்கு கோலாகலமாக நடந்த திருமணம்…. இணையத்தை கலக்கும் லேட்டஸ்ட் போட்டோஸ் இதோ…!!

Published

on

பிரபல நடிகரான விஜய குமாரின் பேத்திக்கு நேற்று கோலாகலமாக திருமணம் நடைபெற்றது.

விஜய் குமாரின் முதல் மனைவி முத்து கண்ணு. இவர்களுக்கு அனிதா, கவிதா என்ற மகள்களும் அருண் விஜய் என்ற மகனும் இருக்கின்றனர்.

Advertisement

இதில் அனிதாவும் கவிதாவும் மருத்துவம் படித்த டாக்டர்களாக மாறிவிட்டனர்.

அருண் விஜய் ஹீரோவாக வலம் வருகிறார். இந்நிலையில் சில வருடங்கள் கழித்து தன்னுடன் ஒன்றாக சினிமாவில் நடித்த மஞ்சுளா உடன் விஜயகுமாருக்கு காதல் மலர்ந்தது.

Advertisement

இதனால் முதல் மனைவி சம்மதத்துடன் விஜயகுமார் நடிகை மஞ்சுளாவை திருமணம் செய்து கொண்டார்.

இந்து தம்பதியினருக்கு வனிதா, பிரீத்தா, ஸ்ரீதேவி ஆகிய மூன்று மகள்கள் இருக்கின்றனர்.

Advertisement

இதில் விஜயகுமாரின் இரண்டாவது மகளான அனிதா விஜயகுமாரின் மகள் தியாவிற்கும் திலன் என்பவருக்கும் நேற்று கோலாகலமாக திருமணம் நடைபெற்றது.

இருவரும் காதலித்த நிலையில் கடந்த ஆண்டு நிச்சயதார்த்தம் நடைபெற்றது. நேற்று ஷெர்ட்டன் கிராண்ட் ஹோட்டலில் திருமணம் விமர்சையாக நடைபெற்றது.

Advertisement

இந்த திருமணத்திற்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், நடிகர் தனுஷ், சூர்யா குடும்பத்தினர், மீனா, சினேகா உள்ளிட்ட ஏராளமான பிரபலங்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தியுள்ளனர்.

இது தொடர்பான புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது. அதனை பார்த்த ரசிகர்கள் புது மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Advertisement