“அம்மாடியோ.. அந்தக் கதவு மட்டும் திறந்திருந்தா…” பெண்ணின் வீட்டை முற்றுகையிட்டு கொடூரக் கும்பலின் வெறிச்செயல்.. நெஞ்சைப் பதறவைக்கும் வீடியோ..!! – cinefeeds
Connect with us

CRIME

“அம்மாடியோ.. அந்தக் கதவு மட்டும் திறந்திருந்தா…” பெண்ணின் வீட்டை முற்றுகையிட்டு கொடூரக் கும்பலின் வெறிச்செயல்.. நெஞ்சைப் பதறவைக்கும் வீடியோ..!!

Published

on

உத்தரப் பிரதேச மாநிலம் கோரக்பூரில் நிலத் தகராறு காரணமாகப் பெண் ஒருவரின் வீட்டை ஒரு கும்பல் முற்றுகையிட்டு கொடூரத் தாக்குதலில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்தப் பெண் தனது வீட்டின் கதவைப் பூட்டிக்கொண்டதால், ஆத்திரமடைந்த மர்ம நபர்கள் கதவை உடைக்க முயன்று, இரும்புக் கம்பிகள் மற்றும் ஆயுதங்களால் பயங்கரமாகத் தாக்கினர். கதவைத் திறக்க முடியாத விரக்தியில், வீட்டின் மீது சரமாரியாகக் செங்கற்களை வீசி எறிந்து தாக்குதல் நடத்தினர். ஒருவேளை அந்த வீட்டின் கதவு உடைந்திருந்தால், உள்ளே இருந்த பெண்ணை அந்தக் கும்பல் அடித்துக் கொலை செய்திருக்கும் என்ற அச்சம் அங்கு நிலவியது.

இந்த உயிருக்கு ஆபத்தான இக்கட்டான சூழ்நிலையிலும், அந்தப் பெண் மிகுந்த தைரியத்துடன் உடனடியாகக் காவல் கட்டுப்பாட்டு அறைக்குத் தகவல் தெரிவித்தார். தகவல் அறிந்தவுடன் விரைந்து வந்த கோரக்பூர் காவல்துறையினர், வீட்டைச் சூழ்ந்திருந்த மர்ம நபர்களை விரட்டியடித்து அந்தப் பெண்ணை பத்திரமாக மீட்டனர். இந்தச் சம்பவத்தின் மூலம் காவல்துறையினர் சரியான நேரத்தில் வந்து அந்தப் பெண்ணின் உயிரைக் காப்பாற்றியுள்ளனர். தற்போது நிலத் தகராறு மற்றும் தாக்குதலில் ஈடுபட்ட நபர்கள் மீது வழக்குப் பதிவு செய்து, போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in