GALLERY
“நான் ஏமாற்ற வரவில்லை; கூடவே நிற்க வந்தவன்…” நிதி நிலைமையை லாக் பண்ணிட்டு போயிருக்காங்க… திமுகவை வறுத்தெடுத்து விவசாயக் கடன் சர்ச்சைக்கும் முற்றுப்புள்ளி வைத்த முதல்வர் விஜய்…!!
தமிழக கூட்டுறவு வங்கிகளில் 1 மே 2025 முதல் 28 பிப்ரவரி 2026 வரை 50,000 ரூபாய் வரை பயிர்க்கடன் பெற்ற குறு விவசாயிகளுக்கு மட்டுமே கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என அண்மையில் அரசு அறிவித்திருந்தது. ஆனால், தேர்தல் வாக்குறுதியில் அனைத்து விவசாயக் கடன்களும் முழுமையாகத் தள்ளுபடி செய்யப்படும் எனக் கூறிவிட்டு, தற்போது நிபந்தனைகள் விதிப்பது தங்களுக்கு ஏமாற்றமளிப்பதாகக் கூறி விவசாயிகள் பல்வேறு இடங்களில் போராட்டங்களில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், திருச்சியில் இன்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் விஜய், தாம் பொய் சொல்லி ஏமாற்றுவதற்காக அரசியலுக்கு வரவில்லை என்றும், மக்களின் நிதிநிலை தொடர்பான அனைத்து வழிகளையும் முந்தைய திமுக அரசு முடக்கி வைத்துவிட்டுச் சென்றுள்ளதால், அவற்றை முதலில் முறைப்படுத்த வேண்டியுள்ளது என்றும் விவசாயிகளின் கவலைகளுக்குப் பதிலளித்துள்ளார்.
மேலும் அவர் பேசுகையில், தனது ஆட்சி அமைந்துவிடக் கூடாது எனத் திட்டமிட்ட முந்தைய ஆட்சியாளர்கள் வேரிலேயே வெந்நீர் ஊற்றிவிட்டுச் சென்றுள்ளதாகவும், கடந்த ஒரு மாத காலத்தில் தம்மால் என்னென்ன நன்மைகளைச் செய்ய முடியுமோ அதை மட்டுமே தற்போது செய்துள்ளதாகவும் குறிப்பிட்டார். 200 யூனிட் இலவச மின்சாரத் திட்டத்தில் உள்ள முந்தைய 100 யூனிட் சலுகையானது மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவால் கொண்டு வரப்பட்டது என்றும், மக்களின் பணத்தைச் சூ
றையாடிய மதுக்கடைகளைத் தனது அரசு மூடி வருவதாகவும் அவர் பெருமிதம் தெரிவித்தார். தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றத் தமக்குக் கூடுதல் அவகாசம் தேவை என்றும், தமிழ்நாட்டு மக்களின் முன்னேற்றத்திற்காக அவர்களுடனேயே நின்று உழைக்கப் போவதில் எவ்வித மாற்றுக்கருத்தும் இல்லை என்றும் முதலமைச்சர் விஜய் விவசாயிகளுக்குத் திட்டவட்டமாகப் பேரறிவிப்பு செய்துள்ளார்.
