GALLERY
நடிகை ராஷ்மிகாவின் குட்டி தங்கையா இது..? அம்மா, அப்பாவுடன் இருக்கும் ராஷ்மிகா… பலரும் பார்க்காத குடும்ப புகைப்படங்கள் இதோ..!!

நடிகை ராஷ்மிகா மந்தனா கர்நாடகாவில் இருக்கும் விரோஸ்பெட் ஊரில் கடந்த 1996-ஆம் ஆண்டு பிறந்தார். இவரது தந்தை பெயர் மதன் மந்தனா. தாய் சுமன் மந்தனா.
ராஷ்மிகாவுக்கு ஒரு தங்கையும் உள்ளார். முதலில் கன்னடத்தில் வெளியான கிரிக் பார்ட்டி திரைப்படத்தின் மூலம் ராஷ்மிகா நடிகையாக அறிமுகம் ஆனார்.
முதல் மூன்று படங்கள் ராஷ்மிகா கன்னடத்தில் நடித்தார்.
இதனையடுத்து தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழி திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.
கீதா கோவிந்தம், டியர் காம்ரேட், தேவதாஸ், பீஷ்மா ஆகிய படங்கள் ராஷ்மிகாவுக்கு நல்ல வரவேற்பை தேடி தந்தது.
இதனையடுத்து அல்லு அர்ஜுனுடன் இணைந்து நடித்த புஷ்பா படம் மாபெரும் அளவில் வெற்றி பெற்றது.
தமிழில் ராஷ்மிகா கார்த்தியுடன் சுல்தான் விஜய்யுடன் வாரிசு ஆகிய படங்களில் நடித்துள்ளார்.
கடைசியாக ராஷ்மிகா மந்தனா நடிப்பில் பான் இந்தியா அளவில் பல மொழிகளில் வெளியான அனிமல் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.
அந்த படத்தில் ரன்பீர் கபூருக்கு ஜோடியாக துணிச்சலாக நடித்திருந்தார்.
அதன் மூலம் ராஷ்மிகா மார்க்கெட் மீண்டும் எகிறியுள்ளது. இதனால் முன்னணி ஹீரோக்கள் ராஷ்மிகாவுடன் நடிக்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இந்த நிலையில் ரஷ்மிகா தனது தந்தை, தாய், தங்கையுடன் எடுத்துக் கொண்ட பேமிலி ஃபோட்டோஸ் சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.