GALLERY
இயக்குனர் ஷங்கர் மகளுக்கு கோலாகலமாக நடந்த நிச்சயதார்த்தம்.. மாப்பிள்ளை யாரு தெரியுமா..? இணையத்தை கலக்கும் லேட்டஸ்ட் போட்டோஸ்..!!

முன்னணி இயக்குனரான ஷங்கர் மாபெரும் பட்ஜெட்டில் சிறந்த வெற்றி படங்களை இயக்கியுள்ளார். இவருக்கு ஈஸ்வரி என்ற மனைவி உள்ளார்.
இந்த தம்பதியினருக்கு ஐஸ்வர்யா ஷங்கர், அதிதி ஷங்கர் என்ற இரண்டு மகள்களும், அர்ஜித் ஷங்கர் என்ற மகனும் இருக்கின்றனர்.
அதிதி ஷங்கர் விருமன் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் கதாநாயகியாக அறிமுகம் ஆனார். அதிதி அடுத்தடுத்த படங்களில் கமிட் ஆகி நடித்து வருகிறார்.
கடந்த 2022-ஆம் ஆண்டு சங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யா ஷங்கருக்கும் புதுச்சேரி கிரிக்கெட் அணியின் கேப்டனான ரோஹித் என்பவருக்கும் மகாபலிபுரத்தில் வைத்து பிரம்மாண்டமாக திருமணம் நடைபெற்றது.
இந்நிலையில் ஐஸ்வர்யா ஷங்கர் தனது கணவருடன் இணைந்து ஆறு மாதங்கள் கூட சேர்ந்து வாழவில்லை.
திருமணம் ஆன உடனே ரோஹித் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டதாகவும், அவர் மீது பல குற்றச்சாட்டுகள் எழுந்ததாகவும் புகார்கள் வந்தது. இதனால் ஐஸ்வர்யா ரோஹித் தம்பதியினர் பிரிந்து விட்டனர்.
சட்டப்படி ஐஸ்வர்யா ரோஹித்திடமிருந்து விவாகரத்தும் பெற்றார். இந்நிலையில் ஷங்கர் தனது மகளுக்கு இரண்டாவது திருமணம் செய்து வைக்க முடிவு செய்தார். அதன்படி உதவி இயக்குனரான தருண் கார்த்திகேயன் என்பருடன் ஐஸ்வர்யா ஷங்கருக்கு நிச்சயதார்த்தம் நடந்தது.
இது தொடர்பான புகைப்படங்களை அதிதி ஷங்கர் சோசியல் மீடியாவில் பதிவிட்டு இருவருக்கும் திருமணம் நிச்சயதார்த்தம் முடிந்து விட்டதாக உறுதிப்படுத்தி உள்ளார்.
திருமண தேதி விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. நிச்சயதார்த்தம் நடந்து முடிந்ததால் அவர்களுக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.