GALLERY
திருப்பாச்சி படத்தில் விஜயின் தங்கையாக நடித்த மல்லிகாவா இது..? ஆள் அடையாளம் தெரியலையே.. பலரும் பார்க்காத குடும்ப புகைப்படங்கள் இதோ..!!

நடிகை மல்லிகா கடந்த 2002 ஆம் ஆண்டு நிழல்குத்து என்ற மலையாள திரைப்படம் மூலம் நடிக்க ஆரம்பித்தார்.
இவர் இயக்குனர் சேரன் இயக்கிய நடித்த ஆட்டோகிராப் திரைப்படத்தில் நடித்து தமிழ் திரை உலகில் அறிமுகம் ஆனார். அந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
அடுத்தடுத்த தமிழ் படங்களில் மல்லிகா நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் மலையாள படங்களில் பிஸியாக நடித்த வந்தார்.
இதனையடுத்து மீண்டும் தமிழில் தளபதி விஜய் நடித்த திருப்பாச்சி படத்தில் அவருக்கு தங்கையாக நடித்தார். இந்த படத்தின் மூலம் மல்லிகா பிரபலமானார். அவரது கதாபாத்திரம் மக்கள் மனதை வெகுவாக கவர்ந்தது.
இதனையடுத்து பார்த்திபனுடன் குண்டக்க மண்டக்க, அஜித்துடன் திருப்பதி, ஜெயம் ரவியுடன் உனக்கும் எனக்கும், தோட்டா உள்ளிட்ட திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் மல்லிகா நடித்தார்.
மேலும் அஞ்சலி, திருவிளையாடல், ஊர் மரியாதை உள்ளிட்ட சீரியல்களிலும் அவர் நடித்துள்ளார்.
தமிழ் மட்டும் இல்லாமல் கன்னடம், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் மல்லிகா நடித்துள்ளார்.
கடைசியாக மல்லிகா தமிழில் சென்னையில் ஒரு நாள் திரைப்படத்தில் நடித்தார். அதன் பிறகு மல்லிகா சினிமாவில் இருந்து விலகி ஜெகதீஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
இந்த தம்பதியினருக்கு ஒரு மகன் உள்ளார். இந்நிலையில் மல்லிகா தனது கணவர் மற்றும் மகனுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.
அதனை பார்த்த ரசிகர்கள் உடல் எடை கூடினாலும் அவரது எதார்த்தமான முகம் மாறாமல் அப்படியே இருக்கிறது என கமெண்ட் செய்து வருகின்றனர்.