LATEST NEWS
ரஜினிகாந்த் காதலை சொன்ன விதமே வேற.. ஒரு நிமிஷத்தில் குழம்பிபோன ஒய்.ஜி மகேந்திரன்.. கடைசியில் என்ன ஆச்சு தெரியுமா..?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அபூர்வ ராகங்கள் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார். கடைசியாக நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் படம் மாபெரும் அளவில் வெற்றி பெற்றது.
சமீபத்தில் தனது மகள் இயக்கிய லால் சலாம் படத்தில் ரஜினிகாந்த் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது. தற்போது டி.ஜே ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் திரைப்படத்தில் ரஜினிகாந்த் பிசியாக நடித்து வருகிறார். அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தனது 171-வது படத்தில் ரஜினி நடிக்க உள்ளார்.
இந்நிலையில் நடிகர் ஒய்.ஜி மகேந்திரன் ரஜினிகாந்த் லதா திருமணம் குறித்து ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார். அதில் தனது கல்லூரி மேகசீனுக்காக ரஜினியை பெட்டி எடுக்க லதா விரும்பியுள்ளார். இதுபற்றி லதா மகேந்திரனிடம் கூறியுள்ளார். உடனே மகேந்திரன் தில்லு முல்லு சூட்டிங்கில் இருந்த ரஜினிகாந்த்திடம் லதாவை அழைத்து சென்றுள்ளார்.
இதனையடுத்து ஒரு நாள் ரஜினிகாந்த் மகேந்திரனை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு நான் லதாவை திருமணம் செய்து கொள்ளலாம் என நினைக்கிறேன் என கூறியுள்ளார்.அதனைக் கேட்ட மகேந்திரன் தாராளமாக பண்ணிக்கோங்க. இதை ஏன் என்னிடம் சொல்றீங்க? உங்க சக நடிகை தானே லதா.
நீங்களே அவரிடம் சொல்லலாமே என கூறியுள்ளார். அதற்கு ரஜினி நான் நடிகை லதாவை சொல்லவில்லை. உங்க சிஸ்டர் இன்லா லதாவை சொன்னேன் என கூறியுள்ளார். அதன் பிறகு இரு குடும்பத்தினரும் சந்தித்து பேசி திருமணம் நடந்தது என ஒய்.ஜி மகேந்திரன் பத்திரிகையாளரான சித்ரா லட்சுமணனுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.