இனி நான் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் வரமாட்டேன்.. அதுக்கு ஒரு காரணம் இருக்கு.. செஃப் வெங்கடேஷ் கூறிய தகவலால் அதிர்ச்சியில் ரசிகர்கள்..!! - cinefeeds
Connect with us

LATEST NEWS

இனி நான் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் வரமாட்டேன்.. அதுக்கு ஒரு காரணம் இருக்கு.. செஃப் வெங்கடேஷ் கூறிய தகவலால் அதிர்ச்சியில் ரசிகர்கள்..!!

Published

on

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியை பார்ப்பதற்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இந்நிலையில் குக் வித் கோமாளி 5-வது சீசன் தொடங்குவது குறித்து கடந்த சில மாதங்களாகவே சோசியல் மீடியாவில் செய்திகள் உலா வருகிறது. இந்நிலையில் குக் வித் கோமாளியில் நடுவராக இருந்த செஃப் வெங்கடேஷ் அதிர்ச்சிகரமான தகவலை கூறியுள்ளார்.

அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது, கடந்த சில மாதங்களாகவே குக் வித் கோமாளி நிகழ்ச்சி குறித்த பேச்சு வார்த்தை தான் இருக்கிறது. குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசனில் நான் நடுவராக இருப்பதாக சில சமூக ஊடகப் பக்கத்தில் பதிவுகளை பார்த்தேன். அதனை நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன். இந்த புதிய சீசனில் நான் இல்லை.

Advertisement

என்னோடு சேர்த்து எத்தனையோ பேரை சந்தோஷப்படுத்திய இந்த அருமையான நிகழ்ச்சியில் இருந்து நான் பிரேக் எடுக்கிறேன். என்னை நானாக இருக்க வைத்து, என்னை சகஜம் ஆக்கி என்னுடைய மகிழ்ச்சியான பக்கத்தை காட்டிய நிகழ்ச்சி தான் குக் வித் கோமாளி. கடந்த 24 வருடங்களாக விஜய் தொலைக்காட்சியில் நான் ஒரு பங்காக உள்ளேன். இந்த நேரத்தில் அவர்களுக்கு நன்றி கூறி எனக்கு வரக்கூடிய புதிய வாய்ப்புகளை நோக்கி நகர்கிறேன்.

இந்த நிகழ்ச்சியின் இயக்குனர், ஏற்பாட்டாளர்கள், தயாரிப்பு நிறுவனம் போன்ற அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். எத்தனையோ மன இறுக்கத்தில் இருந்தவர்களுக்கு அதிலிருந்து விடுவித்த அற்புத நிகழ்ச்சியாக குக் வித் கோமாளி உள்ளது. இது ஒரு கடினமான முடிவு. ஆனால் இந்த முடிவில் நான் உறுதியாக உள்ளேன்.

Advertisement

வேறு ஒரு நிகழ்ச்சியில் உங்களை சந்திக்க ஆவலோடு காத்துக் கொண்டிருக்கிறேன். அதுவரை அது என்ன நிகழ்ச்சி என்ன தளம் என்பதை நீங்கள் யோசித்து கொண்டிருங்கள். நன்றி. குக் வித் கோமாளி சீசன் 5 குழுவினருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் என கூறியுள்ளார். இந்த பதிவு தற்போது ரசிகர்களை அதிர்ச்சியில் அழுத்தியுள்ளது. மேலும் செஃப் தாமுடன் நடுவராக அடுத்து யார் பயணிப்பார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in