சூர்யாவுக்கு சம்பளம் கிடையாதா?…. சம்பளத்தை உயர்த்த மாஸ்டர் பிளான் போட்ட சூர்யா…. எல்லா கணக்கும் சரியா தான் வருது…!!! - cinefeeds
Connect with us

LATEST NEWS

சூர்யாவுக்கு சம்பளம் கிடையாதா?…. சம்பளத்தை உயர்த்த மாஸ்டர் பிளான் போட்ட சூர்யா…. எல்லா கணக்கும் சரியா தான் வருது…!!!

Published

on

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் சூர்யா. இவர் தற்போது கங்குவா என்ற திரைப்படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். இந்த திரைப்படம் இரண்டு வருடங்களாக மிகப்பெரிய பொருட்செலவில் எடுக்கப்பட்டு வருகின்றது. இதைத் தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் அடுத்த திரைப்படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

#image_title

இந்த திரைப்படத்தில் நடிகர் சூர்யா சம்பளமே வாங்க வில்லையாம். ஏனென்றால் சூர்யாவின் 2டி நிறுவனமும், கார்த்திக் சுப்புராஜ் வைத்திருக்கும் நிறுவனமும் சேர்ந்து தான் இந்த திரைப்படத்தை தயாரிக்கின்றார்கள். அந்த படத்தின் ட்ராபிக் ஷேரில் இருவருக்கும் பங்கு இருக்கின்றதாம். அப்படி வரும் தொகையை தான் அடுத்த படத்திற்கு அவர் சம்பளமாக நிர்ணயிப்பார் என்று கூறப்பட்டு வருகின்றது.

#image_title

தனுஷ், சிம்பு, அஜித், விஜய் இவர்கள் எல்லாம் கோடிகளில் சம்பளம் வாங்கிக் கொண்டிருக்கும் நிலையில் சூர்யா மற்றும் குறைவாக சம்பளம் வாங்குவது ஏன் என்று பலரும் கூறி வருகிறார்கள். மேலும் கார்த்திக் சுப்புராஜ் கூட்டணியில் உருவாகும் இப்படம் வெற்றி பெற்றால் தனது சம்பளத்தை பல மடங்காக உயர்த்துவதற்கும் வாய்ப்பு இருக்கின்றது என்று கூறப்பட்டு வருகின்றது. மேலும் தயாரிப்பாளர்களின் நிலைமையை புரிந்து கொண்டு சம்பளத்தை அட்ஜஸ்ட் செய்து கொள்ளும் சூர்யாவை போல நடிகர் வேறு யாரும் கிடையாது என்பது உண்மையான விஷயம்.

Advertisement