நடிகர் ராமராஜன்-நளினி தம்பதியின் மகன், மகளை பார்த்திருக்கிறீர்களா…? பலரும் பார்க்காத குடும்ப புகைப்படங்கள் இதோ..!! - cinefeeds
Connect with us

GALLERY

நடிகர் ராமராஜன்-நளினி தம்பதியின் மகன், மகளை பார்த்திருக்கிறீர்களா…? பலரும் பார்க்காத குடும்ப புகைப்படங்கள் இதோ..!!

Published

on

1980 மற்றும் 90-களில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்தவர் நடிகை நளினி. இவர் நடிகரும் இயக்குனருமான ராமராஜனை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இந்த தம்பதியினருக்கு அருண் என்ற மகனும், அருணா என்ற மகளும் இருக்கின்றனர்.

Advertisement

காதலித்து திருமணம் செய்தாலும் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் ஒருமனதாக பேசி விவாகரத்து பெற்றுக் கொண்டனர்.

அந்த காலகட்டத்தில் நளினி தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை தன்வசப்படுத்தினார்.

Advertisement

அதுபோல ராமராஜனும் பத்துக்கும் மேற்பட்ட திரைப்படங்களை இயக்கியுள்ளார். சூப்பர் ஹிட் படங்களிலும் நடித்துள்ளார்.

ராமராஜனும், நளினியும் இணைந்து மனசுக்கேத்த மகராசா, காவலன் ஆகிய படங்களில் நடித்துள்ளனர்.

Advertisement

கடந்த 2014-ஆம் ஆண்டு நளினி ராமராஜனின் மகன் அருணுக்கும் பவித்ரா என்ற பெண்ணுக்கும் சென்னையில் வைத்து திருமணம் நடைபெற்றது.

இதே போல மகள் அருணாவின் திருமணத்திற்கும் ராமராஜன் வந்து தனது மகளை வாழ்த்தி உள்ளார்.

Advertisement

பிரிந்து வாழ்ந்தாலும் நான் இன்னும் ராமராஜனை காதலித்துக் கொண்டுதான் இருக்கிறேன் என ஒரு நிகழ்ச்சியில் நளினி பேசியது குறிப்பிடத்தக்கதாகும்.

இந்நிலையில் நளினி ராமராஜன் தனது மகன் மகளுடன் எடுத்துக் கொண்ட குடும்ப புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.

Advertisement

அதனை பார்த்த ரசிகர்கள் அவர்கள் மீண்டும் ஒன்று சேர்ந்தால் நன்றாக இருக்கும் என கமெண்ட் செய்து வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement