காதல் மனைவியுடன் வெளிநாட்டிற்கு பறந்த அசோக் செல்வன்… இணையத்தை கலக்கும் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இதோ..!! - cinefeeds
Connect with us

GALLERY

காதல் மனைவியுடன் வெளிநாட்டிற்கு பறந்த அசோக் செல்வன்… இணையத்தை கலக்கும் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இதோ..!!

Published

on

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் அசோக் செல்வன் சூது கவ்வும் படத்தில் நடித்தார். அசோக் செல்வனுக்கு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.

அதன் பிறகு ஓ மை கடவுளே, நித்தம் ஒரு வானம் உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்துள்ளார். அசோக் செல்வனின் போர் தொழில் திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

Advertisement

கடந்த சில வருடங்களாக அசோக் செல்வனும், நடிகர் அருள் பாண்டியனின் மகள் மற்றும் நடிகையுமான கீர்த்தி பாண்டியனும் காதலித்து வந்தனர்.

கீர்த்தி பாண்டியன் தும்பா, அன்பிற்கினியாள் உள்ளிட்ட படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார்.

Advertisement

இவர்களது காதலுக்கு இரு வீட்டாரும் சம்மதம் தெரிவித்ததால் கடந்த செப்டம்பர் 13-ஆம் தேதி திருநெல்வேலி மாவட்டத்தில் இட்டேரியில் கோலாகலமாக திருமணம் நடந்தது.

அந்த திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். திருமணத்திற்கு பிறகும் அசோக் செல்வனும், கீர்த்தி பாண்டியனும் அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகின்றனர்.

Advertisement

அசோக்செல்வனும், கீர்த்தி பாண்டியனும் இணைந்து நடித்த ப்ளூ ஸ்டார் திரைப்படம் எப்போது திரைக்கு வரும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்தனர். அந்த படம் வருகிற ஜனவரி 25ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.

நடிப்பு ஒரு பக்கம் இருந்தாலும் அசோக் செல்வன் கீர்த்தி பாண்டியன் தம்பதியினர் தற்போது வெளிநாட்டிற்கு ஹனிமூன் சென்றுள்ளனர்.

Advertisement

இருவரும் இணைந்து வெளிநாட்டில் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.

அதனை பார்த்த ரசிகர்கள் லைக்ஸ்களை அள்ளிக் குவிக்கின்றனர். மேலும் இருவரும் பொருத்தமான ஜோடி என கமெண்ட் செய்து வருகின்றனர்.

Advertisement

Continue Reading
Advertisement