LATEST NEWS
மக்களை கவர்ந்த பிக் பாஸ் பிரபலம் மருத்துவமனையில் அனுமதி.. அவருக்கு என்ன ஆச்சு.. அதிர்ச்சியில் ரசிகர்கள்..!!
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. தற்போது பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் விசித்ரா, வினுஷா, பவா செல்லதுரை, ரவீனா, மாயா, விஷ்ணு, சரவண விக்ரம், கூல் சுரேஷ், ஜோவிகா, பூர்ணிமா ஆகியோர் போட்டியாளர்களாக பங்கேற்றனர்.
இதில் பவா செல்லதுரை எழுத்தாளர், பதிப்பாசிரியர், நடிகர் என பல திறமைகளை கொண்டுள்ளார். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பவா செல்லதுரை உடல் நல குறைவு காரணமாக வெளியேறினார். பிக் பாஸ் வீட்டில் இருந்த கொஞ்ச நாட்களிலே பவா செல்லதுரை அனைத்து தரப்பினரையும் வெகுவாக கவர்ந்தார்.
இந்நிலையில் செல்லதுரை இருதய பிரச்சனை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை நடைபெறுவதாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. பிக் பாஸ் வீட்டில் இருந்தபோதே நெஞ்சு வலிப்பதாக பவா செல்லதுரை கூறியுள்ளார்.
இதனால் சென்னையில் இருக்கும் மருத்துவமனையில் அவருக்கு அறுவை சிகிச்சை நடந்து முடிந்ததாக கூறப்படுகிறது. அவள் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என பலரும் வேண்டி வருகிறார்கள்.