GALLERY
திரிஷா, நயன்தாராவை ஓரம் கட்டு.. அப்போவே நீச்சல் உடையில் இளசுகளை கட்டி இழுத்த ரம்யா கிருஷ்ணன்.. பலரும் பார்க்காத புகைப்படங்கள் இதோ..!!

நடிகை ரம்யா கிருஷ்ணன் ஒரு காலகட்டத்தில் முன்னணி நடிகைகளில் ஒருவராக சினிமாவில் வளம் வந்தார் இவர் தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடம் ஹிந்தி உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார்.
தனது 14 வயதில் நெரம் புலரும்போல் என்ற மலையாள திரைப்படத்தில் ரம்யா கிருஷ்ணன் நடித்தார். ஆனால் எதிர்பார்த்த அளவுக்கு அந்த படம் வரவேற்பை படவில்லை. தமிழில் ஒய்.ஜி மகேந்திரனுக்கு ஜோடியாக வெள்ளை மனசு படத்தில் ரம்யா கிருஷ்ணன் நடித்தார்.
ரஜினிகாந்துடன் படையப்பா திரைப்படத்தில் ரம்யா கிருஷ்ணன் நடித்தார். இந்த படத்தில் ரம்யா கிருஷ்ணனின் நீலாம்பரி கதாபாத்திரம் இன்றும் அனைவராலும் பேசப்படுகிறது. மிகப்பெரிய பட்ஜெட் திரைப்படமான பாகுபலியில் ரம்யா கிருஷ்ணன் ராஜமாதா சிவகாமி தேவியாக நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.
கடைசியாக ஜெயிலர் திரைப்படத்தில் ரஜினிகாந்த் ஜோடியாக 20 வருடங்களுக்கு பிறகு ரம்யா கிருஷ்ணன் நடித்துள்ளார். இந்த படம் மாபெரும் அளவில் வெற்றி பெற்றது இதுபோக பல சீரியல்களிலும் ரம்யா கிருஷ்ணன் நடித்துள்ளார்.
ரம்யா கிருஷ்ணன் இயக்குனர் வம்சி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு ஒரு மகன் உள்ளார். 53 வயது ஆனாலும் இன்றும் இளம் நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் விதமாக ரம்யா கிருஷ்ணன் தனது உடல் நிலையை பராமரித்து வருகிறார்.
நடிக்க வந்த காலகட்டத்தில் நீச்சல் உடையில் ரம்யா கிருஷ்ணன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது. அதனை பார்த்த ரசிகர்கள் ரம்யா கிருஷ்ணா இது? என வாயடைத்து லைக்ஸ்களை தட்டி விடுகின்றனர்.