கடைசியில் நடிகர் விஜயின் மேனேஜரிடமே கைவைத்த சிவகார்த்திகேயன்.. அவரு இல்லனா அந்த விஷயம் நடக்காது போலயே.. ஷாக்கில் விஜய் ரசிகர்கள்..!! - cinefeeds
Connect with us

LATEST NEWS

கடைசியில் நடிகர் விஜயின் மேனேஜரிடமே கைவைத்த சிவகார்த்திகேயன்.. அவரு இல்லனா அந்த விஷயம் நடக்காது போலயே.. ஷாக்கில் விஜய் ரசிகர்கள்..!!

Published

on

பிரபல நடிகர் சிவகார்த்திகேயன் ராஜ்கமல் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகும் தனது 21-வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்குகிறார். இதில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய்பல்லவி நடிக்கிறார். ஜி.வி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். இந்த படத்திற்கு அமரன் என பெயர் வைக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் படத்தின் டீசர் வெளியாகி சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது. தற்போது 80 சதவீத படப்பிடிப்பு முடிவடைந்தது. இன்னும் 20 சதவீதம் மட்டுமே மீதம் உள்ளது என கூறப்படுகிறது. இதற்கிடையே ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்திற்கான பூஜை சமீபத்தில் நடந்தது.

Advertisement

அமரன் படத்தின் ஷூட்டிங் முடித்துவிட்டு ஏ.ஆர் முருகதாஸ் இயக்கும் பட ஷூட்டிங்கில் சிவகார்த்திகேயன் கலந்து கொள்வார் என கூறப்படுகிறது. இந்த நிலையில் இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் தனது 24-ஆவது படத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. அந்த படத்தை பேஷன் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது.

மேலும் நடிகர் விஜயின் மேனேஜர் ஜெகதீஷ் தான் சிவகார்த்திகேயனின் 24-வது படத்தை இணை தயாரிப்பு செய்கிறாராம். சொல்லபோனால்  ஜெகதீஷ் கூறியதால் தான் சிபி சக்கிரவர்த்தியின் படத்தில் நடிக்க சிவகார்த்திகேயன் ஒப்பு கொண்டதாக கூறப்படுகிறது. ஏற்கனவே சிபி சக்கரவர்த்தி சிவகார்த்திகேயன் வைத்து டான் படத்தை இயக்கியுள்ளார். இந்த படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.

Advertisement

 

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in