“இனி தமிழ்நாட்டில் இதுதான் ஃபர்ஸ்ட்..!” தமிழக அரசுக்கு செக் வைத்த பெ.சண்முகம்… அதிரும் அரசியல் களம்..!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“இனி தமிழ்நாட்டில் இதுதான் ஃபர்ஸ்ட்..!” தமிழக அரசுக்கு செக் வைத்த பெ.சண்முகம்… அதிரும் அரசியல் களம்..!!!

Published

on

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் 33-வது பட்டமளிப்பு விழாவில் ‘தமிழ்த்தாய் வாழ்த்து’ மூன்றாவதாகப் பாடப்பட்டது பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. இப்பாடலை இயற்றிய கவிஞரின் பெயரிலேயே இயங்கும் பல்கலைக்கழகத்தில், தமிழ்த்தாய் வாழ்த்துக்கு உரிய மரியாதை அளிக்கப்படவில்லை எனக் கூறி தமிழ் ஆர்வலர்களும் அரசியல் தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் இப்பிரச்சினையில் தமிழ்நாடு அரசின் முடிவு என்னவென்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் வினா எழுப்பியுள்ளார். மேலும், பல்கலைக்கழகங்கள் உட்படத் தமிழ்நாட்டின் அனைத்து அரசு விழாக்களிலும் தமிழ்த்தாய் வாழ்த்தே முதன்மையாக இடம்பெறுவதை உறுதிசெய்ய, வருகின்ற சட்டமன்றக் கூட்டத்திலேயே புதிய சட்டத்தைக் கொண்டுவர வேண்டும் என்றும் அவர் அரசை வற்புறுத்தியுள்ளார்.

Advertisement

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in