LATEST NEWS
“நான் தான் இந்த ஊர் பெரிய ஆளு…” அரசுப் பள்ளிக்குள் நுழைந்து மாணவரை கொடூரமாக தாக்கிய நபர்.. இணையத்தில் வைரலாகும் பகீர் வீடியோ..!!!
பீகார் மாநில கல்வி அமைச்சரின் சொந்த மாவட்டமான கோபால்கஞ்சில் உள்ள உட்கிரமித் மத்திய வித்யாலயா பியாரேபூர் அரசுப் பள்ளியில், நிலக்கிழார் என்று கூறப்படும் நபர் ஒருவர் பள்ளி வளாகத்திற்குள் அத்துமீறி நுழைந்து மாணவரை கொடூரமாகத் தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதிகார மமதையின் உச்சமாக அரங்கேறிய இந்தத் தாக்குதல் சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
बिहार के सरकारी स्कूल में दबंगई! छात्र की बेरहमी से पिटाई का वीडियो वायरल
गोपालगंज में सरकारी स्कूल के अंदर दबंगई का एक चौंकाने वाला मामला सामने आया है। शिक्षा मंत्री के गृह जिले के थावे प्रखंड स्थित उत्क्रमित मध्य विद्यालय प्यारेपुर में कथित भूमिदाता पर विद्यालय परिसर में घुसकर… pic.twitter.com/k7j5dDmTJD— Sadan Singh Rajput (@SadanJee) July 28, 2026
பள்ளிக்கூடத்தின் வகுப்பறைக்கே சென்று மாணவனைத் தாக்கிய நிலக்கிழாரின் இந்த கொடூர செயல் குறித்து தீவிர குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. கல்வி அமைச்சரின் சொந்த மாவட்டத்திலேயே அரசுப் பள்ளி மாணவருக்குப் பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுவது தொடர்பாகப் பொதுமக்கள் மத்தியில் கடும் எதிர்ப்புகளும் விவாதங்களும் கிளம்பியுள்ளன.
