LATEST NEWS
“அடப்பாவமே..! ஓவர் டேக் செய்யப்போய் இப்படியொரு சோகமா..?!” பைக் மீது ஏறி இறங்கிய டிப்பர் லாரி… 50 வயது நபருக்கு நேர்ந்த கொடூரம்… றைந்துபோக வைக்கும் பகீர் வீடியோ..!!
கர்நாடக மாநிலம் தாவணகெரேவில் உள்ள பும்பு பஜார் பகுதியில், அதிவேகமாக வந்த டிப்பர் லாரி மோதியதில் 50 வயதான இருசக்கர வாகன ஓட்டி மஞ்சுநாத் என்பவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். சரஸ்வதி நகரைச் சேர்ந்த மஞ்சுநாத், தனக்கு முன்னால் சென்று கொண்டிருந்த டிராக்டரை முந்திச் செல்ல முயன்றபோது, பின்னால் வந்த டிப்பர் லாரி எதிர்பாராதவிதமாக அவர் மீது மோதி ஏறி இறங்கியதாகக் காவல்துறையினர் தெரிவித்தனர்.
A 50-year-old biker was killed on the spot after being run over by a tipper truck at Bumbu Bazaar in Davanagere.
The horrific accident was captured on a local CCTV camera.
The deceased has been identified as Manjunath, a resident of Saraswati Nagar.
According to police, the… pic.twitter.com/FcCZngdkTe— Hate Detector 🔍 (@HateDetectors) July 28, 2026
இந்தக் கொடூர விபத்தின் காட்சிகள் அங்குள்ள உள்ளூர் சிசிடிவி கேமராவில் பதிவாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக தாவணகெரே தெற்கு போக்குவரத்து காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து, டிப்பர் லாரி ஓட்டுநரைக் கைது செய்துள்ளனர். மேலும், கைப்பற்றப்பட்ட சிசிடிவி காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
