உங்க டங்குவார் அந்துவிடும்… உங்களுக்கெல்லாம் வயசாகிடுச்சி ஆனா நாங்க 20,25 வயசு பசங்க… திமுக எம்பி ஆ.ராசாவை கிழித்தெடுத்த தவெக மா.செ..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

உங்க டங்குவார் அந்துவிடும்… உங்களுக்கெல்லாம் வயசாகிடுச்சி ஆனா நாங்க 20,25 வயசு பசங்க… திமுக எம்பி ஆ.ராசாவை கிழித்தெடுத்த தவெக மா.செ..!!

Published

on

தமிழக வெற்றிக் கழகத்தின் தேனி தெற்கு மாவட்டச் செயலாளர் லெஃப்ட் பாண்டி, திமுக எம்பி ஆ.ராசாவை விமர்சித்து வெளியிட்டுள்ள வீடியோ சமூக வலைதளங்களில் பரவலாக வைரலாகி வருகிறது. சென்னையில் நடைபெற்ற திமுகவின் கண்டன ஆர்ப்பாட்டத்தில், தவெக தலைவரும் தமிழக முதலமைச்சருமான சி. ஜோசப் விஜய் குறித்தும், தவெக அமைச்சர்கள் குறித்தும் ஆ.ராசா கடுமையான மற்றும் தரக்குறைவான விமர்சனங்களை முன்வைத்திருந்தார். இதற்கு எதிர்வினையாற்றும் வகையிலேயே லெஃப்ட் பாண்டி இந்த வீடியோப் பதிவை வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோவில் பேசியுள்ள லெஃப்ட் பாண்டி, “உங்க கட்சியில் இருப்பவர்கள் அனைவரும் 50 அல்லது 60 வயதைத் தாண்டியவர்கள். ஆனால், எங்கள் தவெக கட்சியில் இருப்பவர்கள் அனைவரும் 20 மற்றும் 25 வயதுடைய துடிப்பான இளைஞர்கள்” என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், “தேனிக்காரர்கள் பேசத் தொடங்கினால் உங்கள் டங்குவார் அந்துவிடும்” என்று எச்சரித்த அவர், கட்சி ஆரம்பித்து இரண்டே வருடங்களில் தவெக ஆட்சியைப் பிடித்ததால் வந்த வயிற்றெரிச்சலிலேயே திமுகவினர் இவ்வாறு பேசி வருவதாகவும் மிகக் காரசாரமான வட்டார வழக்கு மொழியில் சாடியுள்ளார்.

Advertisement

சட்டப்பேரவை நிகழ்வுகளைத் தொடர்ந்து திமுக மற்றும் ஆளுங்கட்சியான தவெக இடையே அரசியல் மோதல் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. முதல்வர் விஜய் மற்றும் தவெக அரசை விமர்சித்து ஆ.ராசா பேசிய கருத்துகளுக்குப் பல தரப்பிலிருந்தும் கண்டனங்கள் எழுந்ததை அடுத்து, அவர் தனது பேச்சை திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளார். இதற்கிடையே, முதல்வர் விஜய் மற்றும் அமைச்சர் நிர்மல் குமார் ஆகியோரை அவதூறாகப் பேசியதாக ஆ.ராசா உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் மீது தவெக தரப்பில் காவல்துறையில் முறைப்படி புகாரும் அளிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in