மணிக்கு 8,750 கி.மீ வேகம்.. ஆகஸ்ட் 5-ல் பேரதிர்ச்சி..? நிலவை நோக்கிப் பாயும் ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட்டால் ஆபத்து.. விஞ்ஞானிகள் பகீர் எச்சரிக்கை..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

மணிக்கு 8,750 கி.மீ வேகம்.. ஆகஸ்ட் 5-ல் பேரதிர்ச்சி..? நிலவை நோக்கிப் பாயும் ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட்டால் ஆபத்து.. விஞ்ஞானிகள் பகீர் எச்சரிக்கை..!!

Published

on

ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தால் கடந்த 2025-ஆம் ஆண்டு விண்ணில் ஏவப்பட்ட ‘பால்கன் 9’ ராக்கெட்டின் ஒரு பகுதி, நிலவின் மேற்பரப்பில் மோதவுள்ளதாக விஞ்ஞானிகள் பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளனர். விண்வெளியில் கைவிடப்பட்ட நிலையில் சுற்றித் திரியும் இந்த ராக்கெட்டின் பாகம், நிலவை நோக்கி அதிவேகமாகப் பயணித்து வருவதாகக் கண்டறியப்பட்டுள்ளது

குறிப்பிட்ட விண்கலன்களை விண்வெளியில் நிலைநிறுத்திய பின்னர், இந்த ராக்கெட்டின் மேல் பகுதியில் போதிய எரிபொருள் இல்லாத காரணத்தால் இதனால் மீண்டும் பூமிக்குத் திரும்ப முடியாமல் போனது. இதன் விளைவாக, புவியின் ஈர்ப்பு விசையில் இருந்து விடுபட்ட அந்த ராக்கெட் பாகம், விண்வெளிக் கழிவாக மாறி தற்போது கட்டுப்பாடின்றி நிலவின் ஈர்ப்பு விசையால் அதை நோக்கி ஈர்க்கப்பட்டு வருகிறது.

Advertisement

வருகிற ஆகஸ்ட் 5-ஆம் தேதியன்று, விண்வெளியில் மிதக்கும் இந்த 4,000 கிலோ எடையுள்ள ராக்கெட் பாகம் சுமார் 8,750 கி.மீ. (5,400 மைல்) வேகத்தில் நிலவின் மேற்பரப்பில் மோதவுள்ளது. இந்த மிகக் கடுமையான அதிவேக மோதலின் காரணமாக நிலவின் பகுதியில் ஒரு புதிய மிகப்பெரிய பள்ளம் உருவாகும் என்று விஞ்ஞானிகள் கணக்கிட்டுள்ளனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in