LATEST NEWS
“இவர்தான் உண்மையான ஹீரோ..! கொந்தளிக்கும் கடலுக்குள் குதித்து… 10 சிறுவனை மீட்ட 16 வயது சாம்பியன்..!நெஞ்சை பதற வையாகும் மீட்பு வீடியோ..!!”
அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள சாண்டா குரூஸ் சீபிரைட் கடற்கரையில், 10 வயது சிறுவன் ஒருவன் எதிர்பாராதவிதமாக கடலின் சீற்றமிக்க ராட்சத அலைகளில் சிக்கி அடித்துச் செல்லப்பட்டான். கரையிலிருந்த மக்கள் இதைக் கண்டு அதிர்ச்சியடைந்து பயத்தில் உறைந்துபோயினர். அலையின் வேகம் சிறுவனை கரையை விட்டு வெகுதூரம் இழுத்துச் சென்ற நிலையில், அவன் தன்னைக் காப்பாற்றிக் கொள்ளப் போராடிக் கொண்டிருந்தான்.
அப்போது அங்குப் பணியிலிருந்த 16 வயதான இளம் உயிர் காப்பாளர் ஒருவன், தன் உயிரைப் பொருட்படுத்தாமல் ஒரு நொடி கூட யோசிக்காமல் கொந்தளிக்கும் கடலுக்குள் குதித்தான். பெரும் அலைகளைக் கடந்து நீந்திச் சென்று, அந்தச் சிறுவனைப் பத்திரமாகப் பிடித்தான். மேலும், பயிற்சி பெறாத பொதுமக்கள் சிலர் காப்பாற்றுவதற்காகக் கடலில் இறங்க முயன்றபோது, அவர்களைத் தடுத்து நிறுத்தித் தகுந்த எச்சரிக்கையும் அளித்து, பிறரின் உதவியோடு சிறுவனைப் பத்திரமாகக் கரைக்குக் கொண்டு வந்தான்.
ஸ்காட் வென்டர் டூசென் என்பவரால் படம்பிடிக்கப்பட்ட இந்த வீரச் செயலின் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. 16 வயது இளைஞனின் இந்தச் சமயோசித புத்தியையும் தைரியத்தையும் அமெரிக்க அதிபர் எரிக் டிரம்ப் உள்ளிட்ட பல பிரபலங்களும், சமூக வலைதளப் பயனர்களும் வெகுவாகப் பாராட்டி, அவனுக்கு நாட்டின் மிகயுயர்ந்த விருது வழங்கப்பட வேண்டும் என்று கூறி வருகின்றனர்.
