LATEST NEWS
இத்தனை நாளா இது யாருக்குமே தெரியாதா..? உலகின் மிகத் தூய்மையான ‘கன்னி ஏரி’ கண்டுபிடிப்பு.. அமெரிக்க குகைக்குள் ஒளிந்திருந்த பிரம்மாண்ட ரகசியம்..!
அமெரிக்காவின் நியூ மெக்சிகோவில் உள்ள லெசுகில்லா குகைக்குள் மனிதர்கள் இதுவரை காலடி வைக்காத சுமார் 700 மீட்டர் ஆழத்தில் பால் வண்ணத்திலான புதிய ஏரி ஒன்றை ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். குகையைச் சுற்றியுள்ள சுண்ணக்கற்கள் மற்றும் ஒளியின் பிரத்யேக எதிரொளிப்பு காரணமாக, பார்ப்பதற்குப் பால் போன்ற கிரீம் நிறத்தில் இந்த ஏரி காட்சியளிக்கிறது. மனிதர்களின் எந்தவொரு தலையீடும் இன்றி, அதன் இயற்கை மாறாத அதிகபட்ச தூய்மைத் தன்மை காரணமாக விஞ்ஞானிகள் இதற்கு ‘கன்னி ஏரி’ (Virgin Pool) என்று பெயரிட்டுள்ளனர்
பல்லாயிரம் ஆண்டுகளாகக் குகையின் மேல்புற இடுக்குகள் வழியாகச் சொட்டுச் சொட்டாக வடிந்த தூய்மையான மழைநீரால் இந்த ஏரி உருவாகியிருக்கலாம் என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர். சூரிய ஒளி, மாசு மற்றும் வெளிப்புறச் சூழல் பாதிப்புகள் ஏதுமின்றி, பூமியின் ஆழத்தில் முற்றிலும் பாதுகாப்பாகப் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் தனிமைப்படுத்தப்பட்டு இருந்ததால், இது உலகின் மிகத் தூய்மையான இயற்கை ஏரிகளில் ஒன்றாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.
