“விஜய்க்கு ஒரு நீதி… சீமானுக்கு ஒரு நீதியா..?” போலிஸை வச்சு செய்த ஐகோர்ட்.. கிழிந்து தொங்கும் இரட்டை நிலைப்பாடு..!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“விஜய்க்கு ஒரு நீதி… சீமானுக்கு ஒரு நீதியா..?” போலிஸை வச்சு செய்த ஐகோர்ட்.. கிழிந்து தொங்கும் இரட்டை நிலைப்பாடு..!!!

Published

on

தமிழக அரசியலில் முக்கியக் தலைவரான நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் குறித்து சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்புவோர் மீது காவல்துறை ஏன் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என நீதிபதி எல். விக்டோரியா கெளரி கேள்வி எழுப்பியுள்ளார். முதலமைச்சர் அல்லது தவெக தலைவர் விஜய் தொடர்பாக சமூக வலைத்தளங்களில் கருத்துத் தெரிவித்த திமுக எம்.எல்.ஏ உள்ளிட்டோர் மீது உடனடி நடவடிக்கை எடுத்த காவல் துறை, சீமான் குறித்து அவதூறு பரப்புபவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதில் பாகுபாடு காட்டுவது ஏன் என்றும் நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்தது.

மேலும், சீமான் தொடர்பான மார்பிங் செய்யப்பட்ட ஆபாச மற்றும் அவதூறு புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் இருந்து உடனடியாக நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. அத்துடன், இத்தகைய அவதூறு மற்றும் மார்பிங் செயல்களில் ஈடுபட்ட நபர்கள் மீது வழக்குப் பதிவு செய்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என்றும் காவல் துறைக்கு நீதிபதி விக்டோரியா கெளரி கண்டிப்பான உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in