“பகீர்…! இனிமே சேர்ந்து வாழலாம்…! ஆசையா மனைவியை கூட்டிட்டு வந்து… தூக்கில் தொங்கவிட்டு வீடியோ எடுத்த கணவனின் கொடூர செயல்..!!” – cinefeeds
Connect with us

CRIME

“பகீர்…! இனிமே சேர்ந்து வாழலாம்…! ஆசையா மனைவியை கூட்டிட்டு வந்து… தூக்கில் தொங்கவிட்டு வீடியோ எடுத்த கணவனின் கொடூர செயல்..!!”

Published

on

கர்நாடக மாநிலம் பாகல்கோட்டை மாவட்டம் கலகலி கிராமத்தைச் சேர்ந்த பிரவீன் ஜிகலூர் என்பவருக்கும், பாக்யஸ்ரீ என்ற பெண்ணிற்கும் திருமணம் நடந்துள்ளது. திருமணத்திற்குப் பிறகு தம்பதியிடையே அடிக்கடி குடும்பப் பிரச்சினையும், மனைவியின் நடத்தை மீது பிரவீனுக்கு சந்தேகமும் ஏற்பட்டு வந்தது. இதன் காரணமாக ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், பாக்யஸ்ரீ கடந்த இரண்டு மாதங்களாகத் தனது கணவரைப் பிரிந்து பெற்றோர் வீட்டில் வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில் பிரவீன் தனது மனைவியின் பெற்றோர் வீட்டிற்குச் சென்று, கடந்த கால கசப்பான சம்பவங்களை மறந்துவிட்டு இனிமேல் சமாதானமாகச் சேர்ந்து வாழலாம் என ஆசை வார்த்தைகள் கூறி பாக்யஸ்ரீயை மீண்டும் தனது வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார். ஆனால், அன்று மாலையே இருவருக்கும் மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த பிரவீன், பாக்யஸ்ரீயைக் கட்டையால் தாக்கிவிட்டு பின்னர் அவரைத் தூக்கில் தொங்கவிட்டுள்ளார்.

Advertisement

பாக்யஸ்ரீ உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த இறுதித் தருணங்களை பிரவீன் தனது மொபைல் போனில் வீடியோவாகப் பதிவு செய்ததுடன், மனைவியின் பெற்றோருக்கு வீடியோ கால் செய்து அவர்களின் மகள் உயிருக்குப் போராடும் கொடூரக் காட்சியைப் பார்க்குமாறு கட்டாயப்படுத்தியுள்ளார். இதுகுறித்துத் தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து பாக்யஸ்ரீயின் உடலைக் கைப்பற்றினர். இக்கொடூரச் செயலைச் செய்துவிட்டுத் தலைமறைவாக முயன்ற கணவன் பிரவீனை போலீசார் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in