LATEST NEWS
பர்த்டே பரிசுனா இப்படி இருக்கணும்.. லெஜண்ட் பட நாயகிக்கு ரூ.3 கோடி மதிப்புள்ள தங்க கேக்கை கொடுத்த பாடகர்.. யாருன்னு தெரியுமா..?
முன்னணி நடிகையான ஊர்வசி ரவுத்தேலா கடந்த 2015-ஆம் ஆண்டு மிஸ் திவா மிஸ் யூனிவர்ஸ் இந்தியா பட்டத்தினை வென்றுள்ளார். 15 வயதில் ஊர்வசி தனது மாடலின் வாழ்க்கையை தொடங்கினார்.
கடந்த 2009-ஆம் ஆண்டு ஊர்வசி மிஸ் டீன் இந்தியா பட்டத்தினை வென்றுள்ளார். கடந்த 2013-ஆம் ஆண்டு வெளியான சிங் சாப் தி கிரேட் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகம் ஆனார். கன்னட திரையுலகில் திரு ஐராவதம் படத்தின் மூலம் ஊர்வசி ரவுத்தேலா அறிமுகம் ஆனார்.
தமிழில் கடந்த 2022-ஆம் ஆண்டு வெளியான தி லெஜண்ட் திரைப்படத்தில் ஊர்வசி ரவுத்தேலா நடித்துள்ளார். தமிழில் வெளியான திருட்டு பயலே 2 படத்தின் ஹிந்தி ரீமேக்கில் ஊர்வசி நடித்து வருகிறார். இந்நிலையில் ஊர்வசி தனது முப்பதாவது பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடியுள்ளார்.
இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் ஊர்வசிக்காக தயார் செய்யப்பட்ட அந்த கேக் 3 கோடி ரூபாய் மதிப்பில் 24 கேரட் தங்கத்தால் ஆனது. ஊர்வசியுடன் ராப் பாடகர் ஹனி சிங் அந்த புகைப்படத்தில் உள்ளார்.
தற்போது ஊர்வசி ரவுத்தேலா ஹனி சிங்குடன் இணைந்து செகண்ட் டோஸ் என்ற மியூசிக் ஆல்பத்தில் வேலை பார்த்து வருகிறார். ஊர்வசி ரவுத்தேலா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஹனி சிங்குக்கு நன்றி தெரிவித்துள்ளார். மேலும் என்னை பொறுத்தவரை ஊர்வசி ரவுத்தேலா உண்மையாகவே உலகின் மிக அழகான பெண்.
அதை நான் அவரிடம் பலமுறை கூறியுள்ளேன். அதனால் தான் மூன்று கோடி ரூபாய் மதிப்புள்ள இந்த கேக்கை ஊர்வசிக்காக வாங்க முடிவு செய்தேன் என ஹனி சிங் பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.