51 வயதிலும் இளமையா இருக்கீங்களே..! உள்ளம் கொள்ளை போகுதே பட நாயகி இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா..? வைரலாகும் புகைப்படம்..!! - cinefeeds
Connect with us

LATEST NEWS

51 வயதிலும் இளமையா இருக்கீங்களே..! உள்ளம் கொள்ளை போகுதே பட நாயகி இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா..? வைரலாகும் புகைப்படம்..!!

Published

on

நடிகை அஞ்சலா ஜவேரி லண்டனில் பிறந்தவர். இவர் ஹிமாலய புத்ரா என்ற ஹிந்தி திரைப்படத்தின் மூலம் தனது திரை வாழ்க்கையை தொடங்கினார். தமிழில் கடந்த 1997-ஆம் ஆண்டு அஜித், சத்யராஜ் நடிப்பில் வெளியான பகைவன் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.

கடந்த 2001-ஆம் ஆண்டு வெளியான உள்ளம் கொள்ளை போகுதே திரைப்படம் அஞ்சலா ஜவேரிக்கு நல்ல வரவேற்பை தேடி தந்தது. இவர் தமிழ் மட்டும் இல்லாமல் தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, கன்னடம் உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார்.

Advertisement

தமிழில் கடைசியாக கடந்த 2019- ஆம் ஆண்டு வெளியான இனிது இனிது திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் அஞ்சலா நடித்தார். இதனையடுத்து சினிமாவில் இருந்து விலகிய அஞ்சலா தருண் அரோரா என்பவரை திருமணம் செய்து கொண்டார். தற்போது அவருக்கு 51 வயது ஆகிறது.

சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் அஞ்சலா தனது குடும்ப புகைப்படங்களை வெளியிடுவார். இந்நிலையில் சமீபத்தில் அஞ்சலா வெளியிட்ட புகைப்படத்தை பார்த்து 90’s நடிகை அஞ்சலாவா இது இன்னும் இளமையாக இருக்கிறாரே என கமெண்ட் செய்து வருகின்றனர்.

Advertisement

Continue Reading
Advertisement