கூகுள் நிறுவனத்தை கண்டித்த பிரபல நடிகை.. எதுக்குன்னு தெரியுமா..? வைரலாகும் இன்ஸ்டாகிராம் பதிவு..!! - cinefeeds
Connect with us

LATEST NEWS

கூகுள் நிறுவனத்தை கண்டித்த பிரபல நடிகை.. எதுக்குன்னு தெரியுமா..? வைரலாகும் இன்ஸ்டாகிராம் பதிவு..!!

Published

on

நடிகை தீபிகா தாஸ் கன்னட திரை உலகில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். இவர் கன்னட பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பெரும்பாலான ரசிகர்களை தன் வசப்படுத்தினார். கடந்த சில நாட்களுக்கு முன்பு தீபிகா தாஸ் தனது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார்.

இந்நிலையில் ரசிகர்கள் தீபிகா தாசுக்கு எத்தனை வயது என கூகுளில் தேடியுள்ளனர். அப்போது அவருக்கு 31 வயது என கூகுள் காண்பித்துள்ளது. இதை அறிந்த தீபிகா கூகுள் நிறுவனத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் தீபிகா தாஸ் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது, எனக்கு தற்போது 28 வயது தான் ஆகிறது.

Advertisement

ஆனால் நான் 1993-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 23-ஆம் தேதி பிறந்தேன் என கூகுளில் தவறாக தகவல் பதிவேற்றம் செய்யப்பட்டிருக்கிறது. எனது புகழை கெடுக்கும் வகையில் கூகுள் நிறுவனம் நடந்து கொண்டுள்ளது. இதனை நான் கண்டிக்கிறேன்.

கூகுள் நிறுவனத்தினர் செய்த தவறால் நான் 82 வயது மூதாட்டியாக ஆனது போல உணர்கிறேன். எனக்கு மிகவும் மன வேதனையாக இருக்கிறது. நடந்த அனைத்திற்கும் நான் நன்றி தெரிவிக்கிறேன். எனக்கு நானே பிறந்தநாள் வாழ்த்து சொல்லி கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார்.

Advertisement

Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in