ரீ-என்ட்ரி கொடுக்கும் தாமிரபரணி நடிகை.. ஹீரோவாக களமிறங்கும் பிரபல ஹீரோ.. வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படம்..!! - cinefeeds
Connect with us

LATEST NEWS

ரீ-என்ட்ரி கொடுக்கும் தாமிரபரணி நடிகை.. ஹீரோவாக களமிறங்கும் பிரபல ஹீரோ.. வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படம்..!!

Published

on

நடிகை பானு தமிழில் கடந்த 2007-ஆம் ஆண்டு வெளியான தாமிரபரணி படத்தில் விஷாலுக்கு ஜோடியாக நடித்தார் இந்த படம் வெற்றி பெற்றதால் ரசிகர் மன்றம், அழகர் மலை, பொன்னர் சங்கர், சட்டப்படி குற்றம் உள்ளிட்ட படங்களில் பானு நடித்தார். மலையாளத்தில் பானு முக்தா என்ற பெயரில் பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார்.

கடந்த 2015-ஆம் ஆண்டு பானு திருமணம் செய்து கொண்டார். அவருக்கு கியாரா என்ற பெண் குழந்தை உள்ளது. நீண்ட காலமாக நடிப்பிற்கு பிரேக் விட்டு பானு தனது குடும்பத்தை கவனிப்பதில் பிஸியாக இருந்தார். இந்நிலையில் ஏழு ஆண்டுகால இடைவெளிக்கு பிறகு தற்போது பானு குருவி பாப்பா என்ற மலையாள திரைப்படத்தில் ரீ என்ட்ரி கொடுக்க உள்ளார்.

Advertisement

இந்த படத்தில் பானுவுக்கு ஜோடியாக நடிகர் வினித் நடிக்கிறார். இவர் தமிழ், மலையாளம் உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் 60-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். தமிழில் காதல் கிறுக்கன், பிரியமான தோழி, தேவதை, சந்திரமுகி உள்ளிட்ட திரைப்படங்களில் வினித் நடித்துள்ளார்.

சமீபத்தில் குருவி பாப்பா என்ற படத்தின் டீசர் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. அதில் பானு டீன் ஏஜ் வயது பெண்ணுக்கு தாயாக நடிக்கிறார். கடந்த 3 நாட்களுக்கு முன்பு பானு ஒரு குழந்தையை கையில் வைத்திருப்பது போன்ற போஸ்டர் வெளியானது. நீண்ட இடைவெளிக்கு பிறகு பானுவும், வினித்தும் நடிப்பதால் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் உள்ளனர்.

Advertisement

 

View this post on Instagram

 

A post shared by Muktha (@actressmuktha)

Advertisement

Advertisement