LATEST NEWS
ப்பா.. ஹாலிவுட் படத்தையே மிஞ்சிடுவாங்க போலயே.. சிம்பு வெளியிட்ட மிரட்டலான வீடியோ.. தமிழ் சினிமாவின் அடுத்த பாகுபலி இவர்தானோ..?

திரை உலகில் லிட்டில் சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படும் சிம்பு கடந்த 2002-ஆம் ஆண்டு வெளியான காதல் அழிவதில்லை திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். சிறு வயதிலிருந்தே சிலம்பரசன் நடிக்க ஆரம்பித்தார். சிலம்பரசன் நடித்த கோவில், குத்து, மன்மதன், சரவணன், சிலம்பாட்டம், விண்ணைத்தாண்டி வருவாயா உள்ளிட்ட படங்கள் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியான மாநாடு, வெந்து தணிந்தது காடு, பத்து தல உள்ளிட்ட திரைப்படங்கள் வெற்றி பெற்றது. இந்நிலையில் கமல்ஹாசன் தயாரிப்பில் சிலம்பரசன் தனது 48-வது படத்தில் கமிட் ஆகியுள்ளார். வரலாற்றுப் பின்னணியில் உருவாகும் அந்த படத்தை தேசிங்கு பெரியசாமி இயக்க உள்ளார். இந்த படத்திற்கு எஸ்டிஆர் 48 என தற்காலிகமாக பெயர் வைக்கப்பட்டுள்ளது.
சிலம்பரசனின் பிறந்த நாளை முன்னிட்டு அந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வழியாகி நல்ல வரவேற்பு பெற்றது. கடந்த சில மாதங்களாக சிலம்பரசன் மார்ஷியல் ஆர்ட்ஸ், குதிரை ஏற்றம் உள்ளிட்ட பயிற்சிகளை வெளிநாட்டில் மேற்கொண்டு வருகிறார். எஸ்டிஆர்48-வது படத்தில் சிலம்பரசன் வில்லனாகவும், ஹீரோவாகவும் மிரட்ட உள்ளார். இந்நிலையில் சிலம்பரசன் தனது சமூக வலைதள பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோ பிரம்மாண்ட ஹாலிவுட் படத்தையும் மிஞ்சும் அளவுக்கு உள்ளது. எஸ் டி ஆர் 48 படத்திற்காக 90% பிரம்மாண்டமான செட்டுகள் அமைக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. படத்தின் ஷூட்டிங் எப்போது தொடங்கும் என எதிர்பார்த்துக் கொண்டிருந்த ரசிகர்களுக்கு சிம்பு மாசான வீடியோவை வெளியிட்டு விருந்தளித்துள்ளார். அந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.
Excited about this one! StayTuned…
🔜 pic.twitter.com/p2sgSyaeXQ— Silambarasan TR (@SilambarasanTR_) February 26, 2024