LATEST NEWS
அடபாவிங்களா.. ஆட்டோவில் போனாலும் விட மாட்டீங்களா..? ஆடி காரில் வந்த ஏ.ஆர் ரகுமானுக்கு ஏற்பட்ட சிக்கல்.. வைரலாகும் வீடியோ..!!

புகழ்பெற்ற இசையமைப்பாளரான ஏ.ஆர் ரகுமான் கடந்த 1992-ஆம் ஆண்டு வெளியான ரோஜா திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். இவர் தமிழ் மட்டும் இல்லாமல் ஹிந்தி, ஆங்கிலம் உள்ளிட்ட பல மொழி திரைப்படங்களுக்கு இசை அமைத்துள்ளார். ரசிகர்களால் இசை புயல் என அழைக்கப்படும் ஏ.ஆர் ரகுமான் ஆஸ்கார் விருது, கோல்டன் குளோப் விருது, தேசிய திரைப்பட விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளை வென்றுள்ளார்.
மேலும் ஏ.ஆர் ரகுமான் பல்வேறு இடங்களில் இசை கச்சேரிகளை நடத்தியுள்ளார். ஏ ஆர் ரகுமான் வருகிறார் என்றாலே அவரைப் பார்ப்பதற்கு மக்கள் திரண்டு நிற்பார்கள். அந்த வகையில் சென்னை மாவட்டத்தில் உள்ள அண்ணா சாலையில் ஹஸ்ரத் சையத் மூஸா காதிரி என்ற தர்கா அமைந்துள்ளது.
மிகவும் புகழ்பெற்ற இந்த தர்காவிற்கு மத வேறுபாடு என்று ஏராளமான மக்கள் வந்து வழிபட்டு செல்வார்கள். ஆண்டுதோறும் இங்கு சந்தனக்கூடு கந்தூரி மற்றும் ஆண்டு விழா கொண்டாட்டம் நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் தர்காவில் நடைபெற்ற சிறப்பு பிரார்த்தனையில் இசையமைப்பாளர் ஏ.ஆர் ரகுமான் கலந்து கொண்டார்.
அவரை பார்ப்பதற்கு ஏராளமான ரசிகர்கள் அங்கு திரண்டனர். ஆடி காரில் தர்காவிற்கு வந்த இசையமைப்பு ஏ.ஆர் ரகுமான் கூட்ட நெரிசலில் சிக்கிக்கொண்டார். அதன்பிறகு வேறு வழி இல்லாமல் அங்கிருந்த ஆட்டோவில் புறப்பட்டு சென்றார். சிறிது தூரம் சென்றவுடன் மீண்டும் தனது காரில் ஏறிக்கொண்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.