LATEST NEWS
அப்பா தவற விட்ட இடத்தை பிடிக்க போகும் மகள்.. பேத்திக்கு பொன்னாடை போர்த்தி பாராட்டிய பாரதிராஜா.. வைரலாகும் வீடியோ..!!
இயக்குனர் பாரதி ராஜா மண்வாசம் மிக்க படங்களை இயக்கி மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்துள்ளார். பாரதிராஜா இயக்கிய 16 வயதினிலே, கிழக்கே போகும் ரயில், சிகப்பு ரோஜாக்கள் உள்ளிட்ட படங்கள் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
பாரதிராஜாவின் மகன் மனோஜ் பாரதிராஜா ஒரு சில படங்களில் நடித்துள்ளார். அவர் சங்கரிடம் உதவி இயக்குனராகவும் வேலை பார்த்து வந்துள்ளார். இப்போது வயதான நிலையிலும் பாரதிராஜா முக்கியமான கதாபாத்திரங்களை ஏற்று நடித்து வருகிறார்.
நடிகர் தனுஷ் உடன் திருச்சிற்றம்பலம் படத்தில் பாரதிராஜா நடித்தார். இந்த நிலையில் பாரதிராஜாவின் பேத்தி மதுவதனி தனது தாத்தாவை வைத்து தான் படித்த பள்ளிக்காக ஒரு குறும்படத்தை இயக்கி உள்ளார்.
சிறுவயதிலேயே தனது பேத்தி படப்பிடிப்பில் சிறப்பாக வேலை செய்வதை பாரதிராஜா பார்த்து பெருமை பட்டுள்ளார். மேலும் தனது பேத்தியை பாராட்டும் விதமாக பொன்னாடை போர்த்தி கௌரவித்துள்ளார். இது தொடர்பான புகைப்படங்களும், வீடியோக்களும் தற்போது சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.
View this post on Instagram