அடேங்கப்பா..! இளையராஜாவின் படத்தில் நடிக்கும் தனுஷுக்கு இத்தனை கோடி சம்பளமா..? என்னப்பா சொல்றீங்க..!! - cinefeeds
Connect with us

LATEST NEWS

அடேங்கப்பா..! இளையராஜாவின் படத்தில் நடிக்கும் தனுஷுக்கு இத்தனை கோடி சம்பளமா..? என்னப்பா சொல்றீங்க..!!

Published

on

முன்னணி நடிகரான தனுஷ் திருடா திருடி, சுள்ளான், புதுப்பேட்டை, பொல்லாதவன், அசுரன், ஆடுகளம் உள்ளிட்ட சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான கேப்டன் மில்லர் திரைப்படம் மாபெரும் அளவில் வெற்றி பெற்றது. இதனையடுத்து அசுரன் படத்தில் தனுஷ் பிசியாக நடித்து கொண்டிருக்கிறார்.

இந்நிலையில் இசையமைப்பாளர் இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு படத்தில் தனுஷ் நடிப்பதாக கடந்த ஆண்டு தகவல் வெளியானது. கடந்த 1976-ஆம் ஆண்டு வெளியான அன்னக்கிளி படத்தின் மூலம் இளையராஜா தனது இசை பயணத்தை தொடங்கினார். அவர் ஆயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார்.

Advertisement

இன்றளவும் இசைஞானி இளையராஜாவின் பாட்டு பலருக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. இசைஞானி இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு படத்தை தனுஷின் கேப்டன் மில்லர் படத்தை இயக்கிய அருண் மாதேஸ்வரன் தான் இயக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அருண் மாதேஸ்வரனுக்கு அது முற்றிலும் மாறுபட்ட அனுபவமாக இருக்கும் என கூறப்படுகிறது.

இந்நிலையில் இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடிப்பதற்கு தனுஷுக்கு 50 கோடி ரூபாய் சம்பளம் பேசப்பட்டுள்ளது. இந்த படத்தை இயக்கும் மும்பையைச் சேர்ந்த பிரபல நிறுவனம் தனுஷுக்கு 50 கோடி ரூபாய் சம்பளம் கொடுக்க ஒப்புக்கொண்டதாக தெரிகிறது. பெருமளவு பட்ஜெட்டில் உருவாக உள்ளதால் இசைஞானியின் வாழ்க்கை வரலாறு படம் மக்களிடையே எதிர்பார்ப்பை கூட்டி உள்ளது.

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in