LATEST NEWS
ஒரு படத்துக்காக எவ்ளோ கஷ்டப்படுறாங்க.. கேப்டன் மில்லர்னா சும்மாவா.. தெறிக்கவிடும் மேக்கிங் வீடியோ..!!
தனுஷ் நடிப்பில் கேப்டன் மில்லர் திரைப்படம் பிரம்மாண்டமாக உருவாகியுள்ளது. இந்த படத்தை அருண் மாதேஸ்வரன் இயக்கியுள்ளார். மேலும் சத்திய ஜோதி பிலிம்ஸ் தயாரிக்கிறது. இந்த படத்தில் பிரியங்கா மோகன், சிவராஜ்குமார், சந்திப் கிஷன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். வெறித்தனமான ஆக்சன் படமாக உருவாகி இருக்கும் கேப்டன் மில்லரில் தனுஷ் 3 விதமான கெட்டப்பில் நடித்துள்ளாராம். கேப்டன் மில்லர் படம் நாளை ஜனவரி 12 திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது.
இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் கேப்டன் மில்லர் படத்தின் டிரெய்லர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது தயாரிப்பு நிறுவனம் கேப்டன் மில்லர் படத்தின் மேக்கிங் வீடியோவை வெளியிட்டது.
அந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் படத்தை எடுக்க பட குழுவினர் எவ்வளவு சிரமப்படுகிறார்கள், படம் வெற லெவலில் இருக்க போகுது என கமெண்ட் செய்து வருகின்றனர். இதோ அந்த வீடியோ..