LATEST NEWS
சென்னை துறைமுகத்தில் நச்சு வாயு கசிவு…! காற்றில் பரவிய சல்பேட் புகை…! தலைமைச் செயலக அதிகாரிகள் வரை மூச்சுத் திணறல்….! பரபரப்பு சம்பவம்…!!
இன்று அதிகாலை சென்னை தவாழிடமான துறைமுகப் பகுதியில் எதிர்பாராத விதமாகக் கப்பல் ஒன்றிலிருந்து சல்பேட் ரசாயன வாயு கசிந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் அப்பகுதி முழுவதும் அடர்ந்த புகைமூட்டமாக மாறியதுடன், காற்றில் வேகமாகப் பரவிய நச்சுத்தன்மையால் சாலையில் சென்ற வாகன ஓட்டிகளுக்கும், அப்பகுதி பொதுமக்களுக்கும் கடுமையான மூச்சுத் திணறல், தொடர் இருமல், குமட்டல் மற்றும் கண், உடல் எரிச்சல் போன்ற உபாதைகள் ஏற்பட்டன.
இந்த நச்சுப் புகையின் தாக்கம் அருகில் உள்ள தலைமைச் செயலகம் வரை பரவியதால், அங்கிருந்த அரசு அதிகாரிகளும் பொதுமக்களும் சுவாசிக்க முடியாமல் பெரும் அவதிக்குள்ளாகினர். பட்டாசு மருந்து போன்ற காரமான நெடி வீசுவதாக மக்கள் தெரிவித்த நிலையில், அதிர்ஷ்டவசமாக அங்கு எவ்வித தீ விபாத்தோ அல்லது உயிரிழப்போ ஏற்படவில்லை என முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தச் விபத்து குறித்துத் தகவல் அறிந்தவுடன் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்புப் பணிகளை முடுக்கிவிட்டுள்ளனர். நச்சுப் புகையால் பாதிக்கப்பட்டு மயக்கமடைந்த நபர்கள் உடனடியாக மீட்கப்பட்டு, ஆம்புலன்ஸ் வாகனங்கள் மூலம் சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றனர்.
மேலும், காற்றில் பரவி வரும் சல்பேட் ரசாயன வாயுவின் வீரியத்தைக் குறைப்பதற்காகத் துறைமுகப் பகுதி முழுவதும் பிரத்யேக ரசாயனப் பொடிகளைத் தூவி, புகையைக் கட்டுப்படுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இச்சம்பவம் காரணமாகச் சென்னை துறைமுகப் பகுதியிலும், தலைமைச் செயலகத்தைச் சுற்றியுள்ள சாலைகளிலும் தற்காலிகமாகப் போக்குவரத்து பாதிக்கப்பட்டுப் பரபரப்பான சூழல் நிலவுகிறது.
