LATEST NEWS
“யப்பா.. என்ன ஒரு டைமிங்..! காளையின் தலையிலயே மிதிச்சு பறந்த வாலிபர்… அந்த கடைசிக் கட்ட ரியாக்ஷன் தான் அல்டிமேட்..! இணையத்தைக் கலக்கும் திக் திக் வீடியோ..!!”
சமூக ஊடகங்களில் தினந்தோறும் பல வீடியோக்கள் வைரலாகி வரும் நிலையில், தற்பொழுது மாட்டுச்சண்டை மைதானத்தில் எடுக்கப்பட்ட ஒரு திகைப்பூட்டும் வீடியோ இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது. அந்த வீடியோவில், ஆக்ரோஷமான ஒரு காளையின் தாக்குதலில் இருந்து வாலிபர் ஒருவர் நூலிழப்பில் காளையின் மேல் பாய்ந்து தப்பிக்கும் காட்சி பார்ப்பவர்களை அதிர வைத்துள்ளது. இந்த இளைஞனின் சாதுரியமான செயலையும் சுறுசுறுப்பையும் பலர் பாராட்டி வந்தாலும், நெட்டிசன்கள் சிலர் இது போன்ற ஆபத்தான சாகசங்களை யாரும் முயற்சிக்க வேண்டாம் என்று எச்சரித்து வருகின்றனர்.
வீடியோவின் தொடக்கத்தில், அந்த வாலிபர் எவ்வித பயமும் இன்றி மைதானத்தில் காளைக்கு முன்னால் நின்று கொண்டு, அதைத் தன் பக்கத்தில் வருமாறு ஆவேசப்படுத்துகிறார். சில நொடிகள் இருவருக்கும் இடையே மோதல் சூழல் நிலவ, திடீரென அந்தக் காளை மிகுந்த கோபத்துடன் அந்த வாலிபரை நோக்கி அதிவேகமாகப் பாய்ந்து வருகிறது. அதைப் பார்ப்பவர்கள் வாலிபருக்கு என்னவாகுமோ என்று அச்சமடைந்த கணத்தில், காளை முட்ட வரும் அந்தச் சரியான நொடியில் வாலிபர் காளையின் தலைக்கு மேல் காற்றில் மிக உயரமாகப் பாய்கிறார். காளை அவருக்குக் கீழே தப்பியோட, அடுத்த சில நொடிகளில் வாலிபர் பத்திரமாகத் தரையில் இறங்குகிறார்.
இந்த வியக்கத்தக்க சம்பவத்திற்குப் பிறகு, அந்த காளைக்கு என்ன நடந்தது என்றே புரியாமல் குழம்பிப் போய், திகைத்து நின்று அந்த இளைஞனைத் திரும்பிப் பார்க்கிறது. இந்த வீடியோ எக்ஸ் தளத்தில் பகிரப்பட்டு, லட்சக்கணக்கான பார்வைகளைக் கடந்து வைரலாகி வருகிறது. வீடியோவின் முடிவில் காளை ஏமாற்றமடைந்து வெட்கப்பட்டு நிற்பது போல் இருப்பதாகப் பல பயனர்கள் வேடிக்கையாகவும், இளைஞனின் துல்லியமான நேரக் கணிப்பைப் பாராட்டியும் கமெண்ட் செய்து வருகின்றனர்.
