LATEST NEWS
தமிழகத்தில் அதிர்ச்சி..! தருமபுரி, கிருஷ்ணகிரியில் திடீர் நில அதிர்வு… அலறியடித்த மக்கள்..!!
தமிழ்நாட்டின் தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளில் லேசான நில அதிர்வு உணரப்பட்டது பொதுமக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இரவு 7:52 மணியளவில் ரிக்டர் அளவுகோலில் 3.0 ஆக இந்த நில அதிர்வு பதிவாகியுள்ளதாகத் தேசிய புவியியல் மையம் தெரிவித்துள்ளது. பூமிக்கு அடியில் சுமார் 10 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நில அதிர்வின் மையம் கொண்டிருந்ததாகக் கண்டறியப்பட்டுள்ளது.
இந்த நில அதிர்வானது ஓசூர், தேன்கனிக்கோட்டை மற்றும் தருமபுரி மாவட்டத்தின் மாரண்டஹள்ளி உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் லேசாக உணரப்பட்டுள்ளது. இருப்பினும், இது மிகக் குறைந்த தீவிரத்தைக் கொண்ட லேசான அதிர்வு என்பதால் பொதுமக்கள் யாரும் அச்சப்படத் தேவையில்லை என்று மாவட்ட நிர்வாகம் தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
