“வெறும் 1000 ரூபாய்க்காக இப்படியா?.. மாணவிகளின் ஆடைகளைச் செய்து சோதனையிட்ட பெண் ஆசிரியை.. பெற்றோர்கள் திரண்டு செய்த அதிரடி காரியம்.. நெஞ்சை பதறவைக்கும் சம்பவம்”..!! – cinefeeds
Connect with us

CRIME

“வெறும் 1000 ரூபாய்க்காக இப்படியா?.. மாணவிகளின் ஆடைகளைச் செய்து சோதனையிட்ட பெண் ஆசிரியை.. பெற்றோர்கள் திரண்டு செய்த அதிரடி காரியம்.. நெஞ்சை பதறவைக்கும் சம்பவம்”..!!

Published

on

ராஜஸ்தான் மாநிலம் சவாய் மாதோபூரில் உள்ள லிவாலி கிராம அரசு மேல்நிலைப் பள்ளியில், 1,000 ரூபாய் பணம் காணாமல் போனதற்காக 9 மற்றும் 11 ஆம் வகுப்பு மாணவிகளின் ஆடைகளைக் களையச் செய்து சோதனையிட்டதாகக் கூறப்படும் புகாரில், இந்தி ஆசிரியை சரஸ்வதி மீனா புதன்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவத்தால் அதிர்ச்சியடைந்த மாணவிகள் தங்களது பெற்றோரிடம் கூற, கிராம மக்கள் மற்றும் பெற்றோர்கள் திரண்டு பள்ளியின் பிரதான வாயிலைப் பூட்டி பெரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆசிரியை சரஸ்வதி மீனா இக்குற்றச்சாட்டுகளை மறுத்து, மாணவர்களிடம் மட்டுமே விசாரித்ததாகக் கூறியுள்ள போதிலும், முதற்கட்ட விசாரணையின் அடிப்படையில் ராஜஸ்தான் குடிமைப் பணிகள் விதிகளின் கீழ் அவர் உடனடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

இவ்விவகாரம் குறித்து விசாரணை நடத்திய கல்வித்துறை அதிகாரிகள், ஆசிரியை மீது துறை ரீதியான விசாரணையைத் தொடங்கியுள்ளனர். மேலும், இந்தச் சம்பவத்தை உயர் அதிகாரிகளுக்கு உரிய நேரத்தில் தெரிவிக்கத் தவறியதுடன், தீவிரமாக கையாளாத பள்ளி முதல்வர் மனோஜ் குமார் மீனா மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இச்சம்பவத்தைப் பொதுவெளியில் கொண்டு செல்ல வேண்டாம் எனச் சில ஆசிரியர்கள் வற்புறுத்தியதாகப் பெற்றோர்கள் குற்றம் சாட்டியுள்ள நிலையில், இதில் நியாயமான விசாரணை நடத்தப்பட்டு விதிகளின்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in