LATEST NEWS
பரபரப்பு.! “ஆபாச வார்த்தை.. ஆடை கிழிந்தது” கோவை தவெக உட்கட்சி மோதலில் பெண் நிர்வாகி கதறல்.. CM விஜய் அதிரடி நடவடிக்கை எடுப்பாரா..?
கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் பகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் உட்கட்சி மோதல் காரணமாகப் பெண் நிர்வாகி ஒருவரின் ஆடை கிழிக்கப்பட்டு, ஆபாச வார்த்தைகளால் திட்டித் தீர்க்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சூலூர் தொகுதி தவெக எம்.எல்.ஏ சுகுமாரை வரவேற்பதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியின் போது இந்த மோதல் வெடித்துள்ளது. கட்சியின் உட்கட்சிப் பூசல் காரணமாக இந்த அசம்பாவிதம் நடந்துள்ளதாகக் கூறப்படும் நிலையில், இது தொடர்பான வீடியோ ஆதாரங்கள் தற்பொழுது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.
இந்த மோதலில் கடுமையான பாதிப்புக்குள்ளான ஊராட்சி செயலாளரான வசந்தி என்பவர் பேசுகையில், தவெக எம்.எல்.ஏ-விற்குத் தான் மாலை அணிவித்து மரியாதை செலுத்தக் கூடாது என்று கூறி ஒரு தரப்பினர் தடுத்ததாகக் குற்றம் சாட்டியுள்ளார். அத்தோடு நில்லாமல், அவர்கள் தன்னை மிகவும் கேவலமான ஆபாச வார்த்தைகளால் திட்டித் தீர்த்ததாகவும், அந்த தள்ளுமுள்ளுவில் தனது ஆடை கிழிக்கப்பட்டதாகவும் அவர் கண்ணீருடன் தெரிவித்துள்ளார். தன்னைப்போலக் கட்சிக்காக உழைத்த பெண்களுக்கு முதலமைச்சர் விஜய் உரிய மரியாதையையும் பாதுகாப்பையும் வழங்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
