மகளிர் தொழில் முனைவோருக்கு ஜாக்பாட்…! 35% வரை மானியத்துடன் தொழில் தொடங்க அரிய வாய்ப்பு… தமிழக அரசு அதிரடி அறிவிப்பு…!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

மகளிர் தொழில் முனைவோருக்கு ஜாக்பாட்…! 35% வரை மானியத்துடன் தொழில் தொடங்க அரிய வாய்ப்பு… தமிழக அரசு அதிரடி அறிவிப்பு…!!

Published

on

தமிழகத்தில் உள்ள குறு, சிறு மற்றும் நடுத்தர (MSME) தொழில் பிரிவினரை ஊக்குவிக்கும் வகையில் தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் (TIIC) சார்பில் ஜூன் 1 முதல் ஜூன் 30 வரை மாநிலம் முழுவதும் சிறப்பு தொழில் கடன் முகாம்கள் நடைபெறுகின்றன. புதிய தொழிற்சாலைகளைத் தொடங்குவதற்கும், ஏற்கனவே இயங்கி வரும் நிறுவனங்களை விரிவுபடுத்துவதற்கும் தேவையான நிதியுதவிகளை வழங்குவதே இம்முகாமின் முக்கிய நோக்கமாகும்.

நடப்பு நிதியாண்டில் மாநில அளவில் 2,125 கோடி ரூபாயும், திண்டுக்கல் மற்றும் தேனி மாவட்டங்களுக்கு மட்டும் பிரத்யேகமாக 93 கோடி ரூபாயும் கடன் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுப் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. தகுதிவாய்ந்த உற்பத்தி சார்ந்த நிறுவனங்களுக்குத் தமிழக அரசின் சார்பில் 25 சதவீத முதலீட்டு மானியமாக அதிகபட்சமாக 150 லட்ச ரூபாய் (1.50 கோடி) வரை சலுகைகள் வழங்கப்பட உள்ளன.

Advertisement

இந்த முகாமில் ‘நீட்ஸ்’ (NEEDS) திட்டத்தின் கீழ் புதிய தொழில் முனைவோருக்கு 95 சதவீத நிதியுதவியுடன் 25 சதவீத முதலீட்டு மானியமும், 3 சதவீத வட்டிச் சலுகையும் சேர்த்து வழங்கப்படுகிறது. அதேபோல, அண்ணல் அம்பேத்கர் திட்டத்தின் (AABCS) கீழ் எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு 35 சதவீத முதலீட்டு மானியமும் 6 சதவீத வட்டி மானியமும் கிடைக்கிறது. உற்பத்தித் துறை மட்டுமின்றி வணிக வளாகங்கள், குளிர்பதன கிடங்குகள், பெட்ரோல் பங்க்குகள் போன்ற சேவைத் துறைகளுக்கும், மகளிர் தொழில் முனைவோருக்குக் கூடுதல் சிறப்பு மானியங்களும் இங்குப் பரிந்துரைக்கப்படுகின்றன.

மிக முக்கியமாக, இந்த ஒரு மாத கால முகாமில் சமர்ப்பிக்கப்படும் கடன் விண்ணப்பங்களுக்கான பரிசீலனைக் கட்டணம் (ஆய்வுக் கட்டணம்) முழுமையாகத் தள்ளுபடி செய்யப்படுவதால், தொழில் தொடங்க ஆர்வமுள்ளவர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in