BIG NEWS: “இனி பேருந்தில் இதற்கெல்லாம் தடை” பேருந்தில் பயணம் செய்யும் பயணிகளுக்கு தமிழக அரசு புதிய கட்டுப்பாடு..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

BIG NEWS: “இனி பேருந்தில் இதற்கெல்லாம் தடை” பேருந்தில் பயணம் செய்யும் பயணிகளுக்கு தமிழக அரசு புதிய கட்டுப்பாடு..!!

Published

on

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில் பயணம் செய்யும் பயணிகள் மொபைல் போன்களைப் பயன்படுத்தும்போது புதிய கட்டுப்பாடுகளைப் பின்பற்றுமாறு போக்குவரத்துக் கழகம் அறிவுறுத்தியுள்ளது. அரசுப் பேருந்துகளில் பயணம் செய்யும்போது செல்போனில் சத்தமாகப் பேசுவது அல்லது இயர்போன் இல்லாமல் சத்தமாகப் பாடல்கள், வீடியோக்கள் பார்ப்பதைத் தவிர்க்க வேண்டும் என இந்த புதிய நடைமுறை வலியுறுத்துகிறது.

பேருந்தில் பயணிக்கும் சக பயணிகளுக்கு எவ்வித தொந்தரவும் இடையூறும் ஏற்படாமல் இருக்க, பாடல் அல்லது வீடியோக்களைப் பார்க்கும்போது கட்டாயம் இயர்போன்/ஹெட்போன்களைப் பயன்படுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. ‘கைபேசியில் ஸ்பீக்கர் ஒலி வேண்டாம்’ என்ற விழிப்புணர்வு சுவரொட்டிகளைப் பேருந்துகளில் ஒட்டி, அமைதியான மற்றும் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்ய அரசு போக்குவரத்துக் கழகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

Advertisement

இந்த புதிய நடைமுறை மற்றும் கட்டுப்பாடுகள் குறித்துப் பேருந்தில் ஏறும் பயணிகளிடம் கட்டாயமாக எடுத்துக்கூறி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்களுக்குப் போக்குவரத்துக் கழகம் உத்தரவிட்டுள்ளது. இதன் மூலம் பொதுப் போக்குவரத்தில் பயணிகளின் சௌகரியமான பயணச் சூழல் மேம்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in