LATEST NEWS
“மனுசனுக்கு கோவிலில் அன்னதானம் போடுறாங்க” ஆனால் பறவை, குருவிகளோட பசியை யார் போக்குவா..? முதியவர் செய்த அந்த ஒரு செயல்… வியந்துபோன மாவட்ட ஆட்சியர்..!!
மதுரை மாவட்டம் பேரையூர் பகுதியைச் சேர்ந்த மாரியப்பன் என்ற முதியவர், பறவைகள் மற்றும் குருவிகளின் பசியைப் போக்குவதற்காகப் பழ மரங்களை நடக் கோரி மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மனு அளிக்க வந்துள்ளார். அவர் தான் சேகரித்த வேப்பங்கொட்டைகளை விற்றுச் சிறுகச் சிறுகச் சேர்த்த 5 ஆயிரம் ரூபாய் பணத்தை இதற்கான நிதியாக மாவட்ட ஆட்சியரிடம் வழங்க முன்வந்துள்ளார்.
“மனுசனுக்கு கோவிலில் அன்னதானம் போடுறாங்க.. ஆனால் பறவை குருவிகளோடு பசியை யார் போக்குவா?..” என்று நெகிழ்ச்சியோடு கேள்வி எழுப்பியுள்ளார் இந்த முதியவர். வனப்பகுதிகளிலும், பொது இடங்களிலும் பறவைகளுக்கும் விலங்குகளுக்கும் போதிய உணவு கிடைக்காமல் அவை தண்ணீரும் இரையும் இன்றித் தவிப்பதாக அவர் வேதனை தெரிவித்துள்ளார். காடுகளில் மான் போன்ற உயிரினங்கள் வறட்சியாலும் உணவில்லாமலும் இறந்துபோகும் அவல நிலை உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
https://twitter.com/polimernews/status/2081939842737504286/video/1
விவசாயியான மாரியப்பன், ஏற்கனவே தனது நிலத்தில் உள்ள அரை ஏக்கர் பகுதியில் விளையும் சோளம் மற்றும் கம்பு உள்ளிட்ட தானியங்களை அறுவடை செய்யாமல் குருவிகள் மற்றும் பறவைகளின் பசிக்காகவே முழுமையாக ஒதுக்கியுள்ளார். வாய் பேச முடியாத உயிரினங்கள் மீது அவர் காட்டும் இந்த அளவற்ற கருணையும், பறவைகளுக்காகத் தனது சொந்தப் பணத்தை அரசுக்கு வழங்க முன்வந்த செயலும் ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்திருந்த பொதுமக்களை நெகிழச் செய்துள்ளது.
