“ஆதவ் அர்ஜுனா பொய் சொல்றாரு… உண்மையை மூடி மறைக்கப் பார்க்குறாங்க… புது குண்டை தூக்கிப்போட்ட முன்னாள் அமைச்சர் ரகுபதி அதிரடி..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“ஆதவ் அர்ஜுனா பொய் சொல்றாரு… உண்மையை மூடி மறைக்கப் பார்க்குறாங்க… புது குண்டை தூக்கிப்போட்ட முன்னாள் அமைச்சர் ரகுபதி அதிரடி..!!

Published

on

அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாளஅமைச்சர் ரகுபதி, மேகதாது விவகாரத்தில் திமுக அரசின் சட்டப் போராட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பொய் பரப்புவதாகக் குற்றம்சாட்டினார். மேகதாது அணையின் திட்ட அறிக்கையை கர்நாடக அரசு தயார் செய்ய உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்த உத்தரவை எதிர்த்து திமுக வழக்கு தொடர்ந்துள்ளதைச் சுட்டிக்காட்டிய அவர், மேகதாது அணை திட்டத்திற்கு திமுக ஒருபோதும் அனுமதித்தது இல்லை என்றும், அரசியலுக்கு புதியவரான ஆதவ் அர்ஜுனா தகுந்த வழக்கறிஞர்களிடம் கேட்டு உண்மை நிலவரத்தைத் தெரிந்துகொள்ள வேண்டும் என்றும் கூறினார்.

கர்நாடக முதலமைச்சருடன் மேகதாது விவகாரம் குறித்து முதலமைச்சர் விஜய் பேச்சுவார்த்தை நடத்துவது வெறும் விளம்பரத்திற்குத் தான் உதவுமே தவிர, அதில் எந்தப் பயனும் இல்லை என்று ரகுபதி விமர்சித்தார். மேலும், மேகதாது விவகாரத்தில் தீர்ப்பாயம் அமைக்கக் கோரி ஒன்றிய அரசை வலியுறுத்துவதே சரியான நடவடிக்கையாக இருக்கும் என்றும், ஆனால் பிரதமர் மோடியைச் சந்தித்த போது முதலமைச்சர் விஜய் இது குறித்து கடிதம் அளித்ததாகவோ அல்லது நேரில் வலியுறுத்தியதாகவோ எந்தத் தகவலும் இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.

Advertisement

முன்னுக்குப் பின் முரண்பாடான தவெக அரசு மேகதாது விவகாரத்தில் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியதைத் தவிர வேறு எந்தத் தீர்க்கமான நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறினார். கடந்த சில மாதங்களாகத் தமிழகத்திற்கு வர வேண்டிய காவிரி நீர் கிடைக்காமல் டெல்டா விவசாயிகள் கடும் பாதிப்பைச் சந்தித்து வருவதால், தவெக அரசு சட்டப்பூர்வமாகவும் அரசியல் ரீதியாகவும் போராடி காவிரி நீரைப் பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என ரகுபதி வலியுறுத்தினார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in