LATEST NEWS
ஆஹா இது சூப்பரா இருக்கே..! “லஞ்சத்துக்கு ‘நோ’: பணத்தோடு வந்தால் உள்ளே அனுமதியில்லை.. மானாமுதுரை தாலுகா ஆபீஸின் அதிரடி நோட்டீஸ்..!!
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் பெயரில் ஒட்டப்பட்டுள்ள வினோத நோட்டீஸ் ஒன்று பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. அந்த அறிவிப்பில், “தாலுகா அலுவலகத்திற்கு வரும் பொதுமக்கள் தங்களது கோரிக்கைகள் தொடர்பான மனுக்களுடன் மட்டுமே வரவேண்டும்; பணம் வைத்திருப்பவர்களுக்கு உள்ளே அனுமதி இல்லை” என்று அதிரடியாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
பொதுவாக அரசு அலுவலகங்களில் பட்டா மாறுதல், சான்றிதழ்கள் பெறுதல், நில அளவை போன்ற பல்வேறு பணிகளுக்காக வரும் பொதுமக்களிடம் இடைத்தரகர்கள் நடமாட்டம் இருப்பதாகப் புகார்கள் எழுகின்றன. இதனைத் தடுத்து, அரசுப் பணிகளில் வெளிப்படைத்தன்மையை உறுதிசெய்யவும், லஞ்ச ஒழிப்பை ஊக்குவிக்கவும் இந்த அதிரடி விழிப்புணர்வு எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
லஞ்சத்திற்கு எதிராகத் தாசில்தார் எடுத்துள்ள இந்தத் துணிச்சலான நடவடிக்கை சாமானிய மக்களுக்கு அரசு நிர்வாகத்தின் மீது நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. தாலுகா அலுவலகத்தில் ஒட்டப்பட்ட இந்த நோட்டீஸ் புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் மிக வேகமாக வைரலாகி பரவி வருகிறது.
