LATEST NEWS
நன்றி சிஎம் விஜய்…”பச்சிளம் குழந்தையை வக்கிரமாக விமர்சித்த யூடியூபர்…: அலாதியாக ஸ்கெட்ச் போட்டு அண்டை மாநிலத்தில் கைது செய்த போலீஸ்…ரேஸர் அலிஷா அப்துல்லா போட்ட எக்ஸ் (X) பதிவு – இணையத்தில் வைரல்…!
பாஜக பெண் நிர்வாகியும், இந்தியாவின் முன்னணி ரேஸ் வீராங்கனையுமான அலிஷா அப்துல்லா மற்றும் அவரது பச்சிளம் குழந்தைகள் குறித்து யூடியூபில் ஆபாசமாகவும், அவதூறாகவும் பேசிய வழக்கில் தலைமறைவாக இருந்த யூடியூபர் முக்தார் கர்நாடகாவில் வைத்து சென்னை சைபர் கிரைம் போலீசாரால் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார். முன்னதாக, அலிஷா அப்துல்லா சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் அளித்த புகாரில், முக்தார் மற்றும் திருச்சி சூர்யா ஆகியோர் தன்னை பொதுவெளியில் பேச முடியாத அளவிற்கு வக்கிரமான வார்த்தைகளால் விமர்சித்ததாகவும், இதனால் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளானதாகவும் செய்தியாளர்களிடம் கண்ணீர் மல்கத் தெரிவித்திருந்தார். இந்த வழக்கில் தொடர்புடைய திருச்சி சூர்யா ஏற்கனவே கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
கைதுக்கு பயந்து தமிழ்நாட்டை விட்டு ஓடி, அண்டை மாநிலமான கர்நாடகாவில் தலைமறைவாக இருந்த முக்தாரைப் பிடிக்க சென்னை சைபர் கிரைம் போலீசார் தனிப்படை அமைத்து தீவிரமாகத் தேடி வந்தனர். இந்நிலையில், அவர் ஒளிந்திருந்த இடத்தை அலாதியாகக் கண்டுபிடித்த தனிப்படை போலீசார் அவரை மடக்கிப் பிடித்தனர். ஒரு பெண்ணாகவும், நாட்டின் விளையாட்டு வீராங்கனையாகவும் இருக்கும் தன் மீது அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக அவதூறு பரப்பப்பட்டதாக அலிஷா குற்றம் சாட்டியிருந்த நிலையில், போலீசாரின் இந்த அதிரடி நடவடிக்கை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முக்தார் கைது செய்யப்பட்ட தகவலை அறிந்த அலிஷா அப்துல்லா, தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் (X) பக்கத்தில் தமிழ்நாடு அரசுக்கும், காவல் துறைக்கும் நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்துப் பதிவிட்டுள்ளார். சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் இருந்து தனக்கு இந்தத் தகவல் கிடைத்ததாகக் குறிப்பிட்டுள்ள அவர், “நன்றி தமிழ்நாடு சிஎம் விஜய்” எனப் பதிவிட்டு முதல்வர் விஜய் மற்றும் காவல் துறைக்குத் தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டுள்ளார்.
