LATEST NEWS
குஷியில் அதிமுக மாஜிக்கள்… முக்கிய பதவியை தூக்கிக்கொடுக்கும் விஜய்… பரபரப்பில் தமிழக அரசியல்..!
அதிமுகவில் இருந்து விலகி தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த முன்னாள் எம்எல்ஏ-க்களுக்கு மாநில அளவிலான முக்கியப் பொறுப்புகளை வழங்க கட்சியின் தலைவர் விஜய் முடிவெடுத்துள்ளதாக அரசியல் வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகி வருகின்றன. சட்டமன்ற உறுப்பினர் பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு தவெக-விற்கு ஆதரவளித்த சி. விஜயபாஸ்கர் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளுக்கு இந்த மாநில அளவிலான உயர்பதவிகள் வழங்கப்பட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. தவெக தலைமை நடத்தவிருக்கும் மாற்றுக் கட்சியினர் இணையும் சிறப்பு நிகழ்ச்சியில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதேபோன்று, அதிமுகவிலிருந்து அண்மையில் விலகி தவெக-வில் ஐக்கியமான முன்னாள் அமைச்சர்களான கடம்பூர் ராஜு, வெல்லமண்டி நடராஜன் உள்ளிட்ட மூத்த நிர்வாகிகளுக்கும் கட்சியில் தகுந்த முக்கியத்துவமும், புதிய பொறுப்புகளும் வழங்கப்பட உள்ளன. தங்களின் நீண்டகால அரசியல் அனுபவம் மற்றும் தேர்தல் களப் பணிகளைக் கருத்தில்கொண்டு, கட்சியின் கட்டமைப்பை மாநிலம் முழுவதும் பலப்படுத்துவதற்காக இவர்களுக்கு முக்கியப் பொறுப்புகள் ஒதுக்கப்பட இருப்பதாகத் தெரிகிறது.
தவெக-வின் இந்த அடுத்தடுத்த அதிரடி நகர்வுகள் மற்றும் பிற கட்சிகளில் இருந்து வரும் முக்கியப் புள்ளிகளுக்கான பதவி அறிவிப்புகள் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. மாற்றுத் திறமை வாய்ந்த தலைவர்களை உள்வாங்கி, தங்களது கட்சியின் செல்வாக்கை அடித்தட்டு மக்கள் வரை கொண்டு சேர்க்கும் நோக்கில் விஜய் இந்த முக்கிய முடிவுகளை எடுத்துள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கணித்து வருகின்றனர்.
