LATEST NEWS
என் வாழ்க்கை அழகா மாறனும்னா.. இது நடந்தா போதும்.. பிக் பாஸ் வீட்டில் முதன்முறையாக மனம் திறந்து பேசிய தினேஷ்..!!
பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. கடைசியில் டைட்டிலை யார் வெல்ல போகிறார்கள் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர். பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் வேல்டு கார்டு போட்டியாளராக தினேஷ் களமிறங்கினார். அவரது மனைவி ரச்சிதா பிக் பாஸ் சீசன் 6 போட்டியாளராக பங்கேற்றார்.
நடிகை ரஞ்சிதா சரவணன் மீனாட்சி சீரியலில் நடித்ததன் மூலம் பிரபலமானார். பிரிவோம் சந்திப்போம் சீரியலில் கதாநாயகனாக நடித்த தினேஷை ரச்சிதா காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால் கணவன் மனைவி இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்டனர். இருவரும் மீண்டும் ஒன்றாக சேர்ந்து வாழ வேண்டும் என சோசியல் மீடியாவில் ரசிகர்கள் பலமுறை கூறியிருக்கிறார்கள்.
சுமார் 8 வருடங்கள் கணவன் மனைவியாக வாழ்ந்த ரச்சிதாவும் தினேஷும் இரண்டு வருடங்களாக தனியாக வாழ்கின்றனர். இந்நிலையில் பிக் பாஸ் வீட்டில் இருக்கும் போது தினேஷ் பேசிய வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது. அதில் தினேஷ் டிராபி கிடைத்தால் உடனே பெங்களூருக்கு செல்வேன்.
பிக் பாஸ் டைட்டிலை வென்ற மகிழ்ச்சியோடு எனது மனைவியை சந்தித்து பிரச்சனைகளை சரி செய்வேன். என் வாழ்க்கையை மீண்டும் புதிதாக ஆரம்பிக்க ஆசை. வாழ்கையை அழகாக மாற்றி மனைவியுடன் சேர்ந்து வாழ வேண்டும் என நினைக்கிறேன் என உருக்கமாக பேசியுள்ளார். அந்த வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.
Morning Activity Task#Dinesh says nera Bangalore pova
Trophy kedacha nalla irukum #BiggBoss7Tamil #BiggBossTamil7pic.twitter.com/AnOECmdBPs— Sekar (@itzSekar) January 10, 2024