அடுத்த டார்கெட் தமிழ் தான்.. பிரபல கோலிவுட் ஹீரோவை வளைத்து போட்ட மஞ்சுமெல் பாய்ஸ் பட இயக்குனர்.. எகிறும் எதிர்பார்ப்பு..!! - cinefeeds
Connect with us

LATEST NEWS

அடுத்த டார்கெட் தமிழ் தான்.. பிரபல கோலிவுட் ஹீரோவை வளைத்து போட்ட மஞ்சுமெல் பாய்ஸ் பட இயக்குனர்.. எகிறும் எதிர்பார்ப்பு..!!

Published

on

இயக்குனர் சிதம்பரம் இயக்கத்தில் வெளியான மஞ்சுமெல் பாய்ஸ் திரைப்படம் சூப்பர் ஹிட் ஆனது. இந்த படம் 100 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்தது. கதாநாயகி இல்லாமல் கூட ஏராளமான ரசிகர்களை இந்த படம் கவர்ந்துள்ளது. நடிகர் கமல், விக்ரம், தனுஷ் என ஏராளமானோர் சிதம்பரத்தை பாராட்டியுள்ளனர்.

மேலும் குணா படத்தின் கண்மணி அன்போடு பாடல் மற்றும் குணா குகை ஆகியவற்ற மையமாகக் கொண்டு வெளியான மஞ்சுமெல் பாய்ஸ் படம் தமிழ் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வெற்றி நடை போடுகிறது. மஞ்சுமெல் பாய்ஸ் பட குழுவினருக்கும், இயக்குனருக்கும் தயாரிப்பு நிறுவனத்திற்கும் தொடர்ந்து பாராட்டுகள் வந்த வண்ணம் உள்ளது.

Advertisement

இயக்குனர் சிதம்பரத்திற்கு தமிழ், மலையாளம் என அடுத்தடுத்து படங்களை இயக்கும் வாய்ப்புகளும் வருகிறது. இந்நிலையில் கோபுரம் ஃபிலிம் சார்பில் மதுரை அன்பு தயாரிக்கும் படத்தை சிதம்பரம் தான் இயக்க உள்ளாராம். அந்த படத்தில் நடிகர் தனுஷ் ஹீரோவாக நடிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

வித்தியாசமான கதை அம்சம் கொண்ட படங்களை தேர்ந்தெடுத்து நடிப்பவர் தனுஷ். அப்படி இருக்க சிதம்பரம் இயக்கத்தில் எந்த மாதிரியான கதைகளத்தில் தனுஷ் நடிப்பார் என் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு தனுஷின் கேப்டன் மில்லர் படம் வெளியாகி திரையரங்குகளில் வெற்றி நடை போடுகிறது.

Advertisement

#image_title